உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னையில் இன்று (நவ., 02) வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க, 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன.தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து, தலைமை தேர்தல் கமிஷன், தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் கமிஷன், அனைத்து மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்கான அறிவுரைகளை வழங்கியது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வரும் நவம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

யார் பங்கேற்பு? புறக்கணிப்பு?

இது தொடர்பாக, சென்னையில் இன்று (நவ 02) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க, 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூ., மதிமுக, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியை பாஜ மேற்கொள்கிறது. வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிரான தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கும் இந்நேரத்தில் வாக்காளர் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் நோக்கமே, இதனால் எதிர்க்கிறோம். மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அதுபோல தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மநீம தலைவர் கமல்

கமல் பேசியதாவது: தேர்தல் கமிஷனின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவசியம். ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுவது ஏன்? நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்ன? இவ்வாறு கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

தீர்மானம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கோரிக்கை

தேர்தல் கமிஷனின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அவசரகதியில்….!

இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கடமை. வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்காததால், சுப்ரீம்கோர்ட்டை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Kalyanasundaram Linga Moorthi
நவ 26, 2025 01:59

if chtalin does not like the SIR, simple resign the cm position go sit near to your dad karunanidhi cemetery and / or the pen spent 80 crores of the citizens hard earned money for your stupidness - may be karunanidhi will come and write in the night after 11 pm till 4 am following day


Thravisham
நவ 03, 2025 19:25

இந்த தீர்மானத்தை அப்படியே போட்டுடவும். எல்லாமே ஊழல் மயம்


Iyer
நவ 03, 2025 00:00

பங்களாதேஷிகளுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து நாங்கள் போலி ஆதார் + போலி வோட்டர் கார்டு வாங்கிக்கொடுத்துள்ளோம். தேர்தல் கமிஷன் பங்களாதேஷிகளை வோட்டர் பட்டியலில் இருந்து நீக்கினால் நாங்கள் செலவழித்த கோடிக்கணக்கான இழப்புக்கு யார் இழப்பீடு கொடுப்பார்கள் ? சுப்ரீம் கோர்ட்டில் DMK RJD TMC வழக்கு தொடுத்தனர்


Madhavan
நவ 02, 2025 20:40

வாக்காளர் எப்போது தனது தவறான விவரங்கள் அடங்கிய வாக்காளர் அட்டையை திருத்திக் கொள்ள வேண்டும் ? தேர்தலுக்கு முன்பா ? அல்லது பின்பா? தவறான விவரங்களுடன் ஒட்டுச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு திருத்தம் செய்து கொள்ள வேண்டுமா? டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்து விட்டு ரயிலை விட்டு இறங்கியதும் செய்த பயணத்துக்கு டிக்கெட் எடுப்பதுதான் சரி எனச் சொல்வீர்களா? அதற்கு அவசியம்தான் என்ன? ஒரு அரசியல் பிரமுகர் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பலரது குடியுரிமையைப் பாதிக்கும் என்கிறார். போலி ஆவணங்கள் மூலம் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் தேர்தல் ஆணையம் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் போவதைத்தான் இவ்வாறு திரித்துச் சொல்கிறார்.


Nagarajan S
நவ 02, 2025 20:40

வாக்காளர் பட்டியல் திருத்தும் என்பது இறந்தவர்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்த்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக தான் மேற்கொள்ள படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. இந்த திருத்தங்கள் அனைத்தும் 2026 பெப்ருவரி முதல் வாரத்தில் முடிந்துவிடும். இவர்கள் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அது தள்ளுபடியாகிவிடும்.


என்றும் இந்தியன்
நவ 02, 2025 20:12

ஸ்டாலின் செய்வது தவறே கிடையாது???இந்த 1.4 கோடி குடிகாரர்கள் தானே இந்த திமுகவிடம் காசு வாங்கி வோட்டு போட்டது??? யாருக்கு??? ஓங்கோல் தெலுங்கர்களுக்கு ஸ்டாலின் மட்டும் தெலுங்கு கிடையாது அந்த அமைச்சரவையில் பலரும் தெலுங்கு, கிருத்துவன். தமிழன் தமிழ்நாட்டு எம் எல் ஏ க்கு டாஸ்மாக்கினாட்டு அமைச்சரவையில் ஒரு மதிப்பே கிடையாது. தமிழர்கள் டாஸ்மாக்கினாடு மக்கள் என்று ஆனார்களோ தமிழ்நாடு நாஸனம் ஆனது. 1967லிருந்து தமிழ்நாடு டாஸ்மாக்கினாடு ஆனது, அன்றிலிருந்து டாஸ்மாக்கினாட்டு முதல்வர்கள் யார் தெலுங்கு கருணாநிதி ஸ்ரீலங்கா மலையாளி எம்ஜிஆர் கன்னட ஜெயலலிதா. தமிழனே ஒரு தமிழன் கூட அருகதை இல்லையா தமிழ்நாட்டிற்கு முதல்வன் ஆக. சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் என்ற நிலையில் இருக்கின்றது தமிழ்நாடு எனப்படும் டாஸ்மாக்கினாட்டு நிலைமை


Suppan
நவ 02, 2025 19:36

இந்த மாதிரி வெட்டியாகக் கூட்டம் போட்டு உருப்படாத அமல் படுத்த வேண்டாத தீர்மானத்தை நிறைவேற்றுவதை விட ஸ்டாலின் உருப்படியான காரியம் செய்யலாம். பூத் முகவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டுமென்று தீர்மானம் போட்டு அதை நடை முறைப்படுத்தினால் உபயோகமுண்டு.


Suppan
நவ 02, 2025 19:33

திகழு வாங்குகிற 200 ரூபாய்க்கு இதற்கு மேல் கூவ வேண்டாம். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இதை செய்யப்போகிறார்கள். மனம் இருந்தால் மார்கமுண்டு. இதைத்தவிர பல கட்சிகளின் பூத் முகவர்களும் சரிபார்க்க வேண்டும் . 2016 ல் தேர்தல் ஆணையத்துக்கு வாக்காளர் பட்டியலைத்திருத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கட்சிக்காரர் இந்த மாதிரியெல்லாம் கருத்து தெரிவித்தால் எள்ளி நகையாடுவர்.


Rajkumar Ramamoorthy
நவ 02, 2025 19:32

இந்த கூட்டம் எப்போ ஒழியும்


திகழ்ஓவியன்
நவ 02, 2025 19:17

ஏன் இவ்வளவு செயும் யோக்கிய சிகாமணிகள் SIR கூட ஆதார் கார்டு இணைக்க சொல்லுங்களேன் தைரியம் இருந்தா , ஆதார் நாட்டின்அடையாளம் என்று டிஜிட்டல் பெருமை பீற்றி கொண்ட கூட்டம் தானே நீங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை