உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழுக்க முழுக்க கோவை வளர்ச்சியே எங்கள் இலக்கு: அண்ணாமலை வாக்குறுதி

முழுக்க முழுக்க கோவை வளர்ச்சியே எங்கள் இலக்கு: அண்ணாமலை வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'என் கனவு நமது கோவை' என்ற பெயரில் 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்துடன் கோவை லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

முக்கிய வாக்குறுதிகள்

* தமிழகத்தில் 2வது ஐ.ஐ.எம்., கோவையில் நிறுவப்படும்.* கோவையில் என்.ஐ.ஏ., மற்றும் என்.சி.பி., கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.* கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.* நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.* காமராஜர் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.* கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

8 வழிச்சாலை

* கோவை - கன்னியாகுமரி, கோவை - திருவனந்தபுரம் (கொச்சி வழி) புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.* கோவை - திருச்சி சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்.* கோவை - கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* திருச்ச - அவிநாசி சாலைக்கு இடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.* குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.

சர்வதேச விளையாட்டு மைதானம்

* கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்.* ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்* உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.* கோவையில் 'கேலோ இந்தியா' திட்டம் மூலம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.* மத்திய அரசின் 'பிரசாத்' திட்டத்தின் கீழ் கோவையின் பழமையான கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.* சர்வதேச தரத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவப்படும்.* சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

சட்டசபை தேர்தலுக்கும் வாக்குறுதி

இத்துடன் 2026ல் தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமையும்போது நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றிய வாக்குறுதியையும் அண்ணாமலை வெளியிட்டார். அதில், ''பிரதமரின் விவசாய கவுரவ நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும், போலீசாரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்; வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும், இந்து அறநிலையத்துறையின் கோயில்கள் மீதான அதிகாரம் மக்களிடம் வழங்கப்படும்'' ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

வாக்குவாதம்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் விதிமீறி பிரசாரம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்'' என்றார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலையிடம் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ''திமுக சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என ஸ்டாலின், உதயநிதியிடம் போய் கேட்டீர்களா? அண்ணாமலைக்கு ஒரு மாதிரியும், ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கிறீர்கள். அறத்துடன் நடந்துக்கொள்ளுங்கள்'' என்றார். இதனையடுத்து, பத்திரிகையாளர்கள் அண்ணாமலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bala
ஏப் 13, 2024 03:22

கோவையில் திமுக டெபாசிட் இழக்கும் என்பது கோவை மக்களின் கருத்து


INDIAN
ஏப் 12, 2024 22:03

இப்படி பத்து வருடங்களாக ஒருவர் சொல்லிக்கொண்டே திரிந்தார் கடைசியில் நாட்டையே விற்று விட்டு ஊழலின் ராஜாவாக பந்தாவாக ரோடு ஷோ நடத்தி கொண்டு வருகிறார் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலை படாத ஒரு பிரதமர்


Premanathan Sambandam
ஏப் 12, 2024 20:29

அப்படியானால் இந்தியா , தமிழ்நாடு வளர்ச்சி யார் பொறுப்பு? உளறல் மன்னன் எங்கள் அண்ணன் ஆடு அண்ணாமலை வாழ்க


J.Isaac
ஏப் 12, 2024 20:19

அடிச்சிவிட வேண்டியது தான் காசா, பணமா?


Rajathi Rajan
ஏப் 12, 2024 20:19

ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குஞ்சு வரும்,,, இது டான் இந்த ஓசி சோறு சொல்லும் பொய் புளுகு முட்டைகள்,, இதையும் நமபித்து நமது வாங்கிய காசுக்கு கூவி விட்டார்


Bala
ஏப் 12, 2024 20:13

RSB பத்திரிக்கையாளர்கள் விடியலின் கொத்தடிமை பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள் அப்படித்தான் அவர்கள் போடும் எலும்பு துண்டுக்காக திரு அண்ணாமலை அவர்களை கேள்வி கேட்பார்கள் விடியலிடமோ சேப்பாக்கம் சேகுவேராவிடமோ கேட்க முதுகெலும்பில்லை


தமிழ்நாட்டுபற்றாளன்
ஏப் 12, 2024 18:41

படிச்ச மேதாவி அதை என் இந்த வருடத்தில் செய்யவில்லை என்று கேட்டால் என்ன கிழிப்பீங்க / புளுகுவத்திற்கு ஒரு அளவு இருக்கு


spr
ஏப் 12, 2024 18:15

ஜி எஸ் டி என்பது நாம் வாங்கும் பொருளுக்காக வாங்குபவர் கொடுப்பது அதாவது "வாங்குவதற்கு வரி" இதனை விற்பவர் அப்படியே அரசிடம் கொடுக்க வேண்டும் இதனால் விற்பவருக்கு அவரது விற்பனைக்கான பணத்தில் எதுவும் குறையப்போவதில்லை - இதுதான் நானறிந்த செய்தி அப்படியிருக்க ஜி எஸ் டியால் விற்பனை செய்பவருக்கு என்ன இழப்பு இருக்கும் யாரேனும் விளக்குவார்களா?


spr
ஏப் 12, 2024 18:09

இவற்றில் பல மாநில அரசின் உதவியோ ஒத்துழைப்போ இல்லாமல் செய்ய முடியாது என்பது நேவ் eல்லோரும் அறிந்த ஒன்றே ல் காங்கிரசால் திட்டமிடப்பட்ட சென்னை பெங்களூரு வழிச்சாலையே ல் பாஜக ஆட்சியில் தொடங்கப்பட்டு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளதென செய்தி மேலும் கொடுக்கப்படும் நிதியுதவியும் மாநில ஆளும்கட்சியாலேதான் கையாளப்படும் அதனால் கையாடப்படும் இவரின் இந்த வாக்குறுதிகள் என்னவாகும் ?


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஏப் 12, 2024 18:01

தம்பி மாநில அரசு இன்னும் ஒரு துரும்பை கூட கோவை மெட்ரோ ப்ராஜெக்ட்க்கு இன்னும் கிள்ளி போடா வில்லை?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ