உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி உயிரிழந்த விவகாரம்; 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பறிமுதல்

சிறுமி உயிரிழந்த விவகாரம்; 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் இருந்து வாங்கிய சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, திருச்சியில் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அமேசான் ஆன்லைன் தளத்தில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ''அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டு உயிரிழந்தார். சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்றார்.இந்த விவகாரத்தை அடுத்து, தமிழகத்தில் நூடுல்ஸ் விற்பனை, தயாரிப்பு கிடங்குகள் மற்றும் இதர இடங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் ஆகியவை இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டது. திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Matt P
செப் 04, 2024 10:09

எதற்கும் ஒரு காலாவதி நாள் இருக்கிறது என்றாலும், நூடுல்ஸ் எல்லாம் விரைவில் கெடாது. உடம்பு ஏற்று கொள்ளாத ஏதாவது ஒரு ஒரு பொருள் அந்த கலவையில் மாட்டியிருக்கலாம் .. காய்ந்து இருந்தால் கெடாது. ஈர ததன்மை இருந்தால் கெடலாம். . பேக்கிங் நல்ல முறையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. உணவு நாக்கில்படும்போதே அதன் சுவையிலோ மணத்திலோ வித்தியாசம் தெரிந்தால் உடனே தூக்கி எறிந்து விடுவது நல்லது. சில நேரங்களில், பசி வந்தால் பத்தும் பறந்து போவதால் ,எதுவுமே மனதுக்கு பெரிதாக தெரிவதில்லை.

Mani . V
செப் 04, 2024 06:12

அப்பு, இதுவே யாருமே உயிரிழக்கவில்லையென்றால் நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம். மாமூலை வாங்கினோமா, கல்லாவை நிரப்பினோமோ என்று இருப்போம்.

Kasimani Baskaran
செப் 04, 2024 06:00

காலாவதியான உணவுப்பொருள்களை விற்பது குற்றம் என்பது கூட தெரியாமல் அமேசான் விற்பது கிடையாது. ஆகவே அமேசானுக்கு ஒரு பெருந்தகையை அபதாரமாக விதிக்க வேண்டும்.

Kasimani Baskaran
செப் 04, 2024 06:00

காலாவதியான உணவுப்பொருள்களை விற்பது குற்றம் என்பது கூட தெரியாமல் அமேசான் விற்பது கிடையாது. ஆகவே அமேசானுக்கு ஒரு பெருந்தகையை அபதாரமாக விதிக்க வேண்டும்.

Natarajan Ramanathan
செப் 04, 2024 04:52

காலாவதி ஆகாவிட்டாலும் ஆச்சி கம்பெனி பொருட்கள் தரம் படு கேவலமாக இருக்கிறதே, அதற்கு எல்லாம் நடவடிக்கையே கிடையாதா?

Jysenn
செப் 04, 2024 02:02

The FSSAI Act says “Best before date” means the date which signifies the end of the period under any stated storage conditions during which the food product shall remain fully marke and shall retain any specific qualities for which tacit or express claims have been made, and beyond that date, the food may still be perfectly safe to consume, though, its quality may have diminished. However the product shall not be sold if any stage the product become unsafe"

Matt P
செப் 03, 2024 22:51

காலாவதியான பொருளை விற்பது தவறு என்றாலும், நாமும் அந்த காலாவதி நாள் கடந்து விட்டதா என்பதை உறுதி படுத்தி பயன்படுத்தலாம். கடைக்கு சென்றாலும் காலாவதியான நாள் கடந்த பொருளை பார்த்தஆ ல் கடை வியாபாரிடம் தெரியப்படுத்தலாம். காலாவதியான பொருளை வியாபாரிகள் விற்றால் அவர்கள் தான் அதற்க்கு பொறுப்பு என்பதில் வேறு கருத்து இல்லை . போன உயிர் திருப்பி வராது என்பதால் குழந்தய்களுக்கு உணvu அளிக்கும்போது-நமக்கும் தான் பொறுப்பாக செயல்பட வேண்டும் உணவு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும்.

முருகன்
செப் 03, 2024 19:07

எந்த ஒரு சம்பவமும் நடந்த பிறகு தான் அந்த துறை அமைச்சர் அதிகாரிகள் அதைப் பற்றி விசாரிக்க நினைப்பது ஏன் அதற்கு என்று இருக்கும் அதிகாரிகள் வேலை என்ன? ஒவ்வொருவரும் தன்னுடைய வேலையை செய்வதில் என்ன பிரச்சினை

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை