ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு
சென்னை:தமிழகத்தில், '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலர் ராஜேந்திரன், துணை தலைவர் சரவணன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, 2025 - 26ம் ஆண்டில், 16 சதவீதம் ஊதியம் உயர்வு வழங்க, அரசு உத்தரவிட்டது. ஆனால், இ.எம்.ஆர்.ஐ., 'கிரீன்ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம், அரசு அறிவித்தபடி, 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்காமல், 10 சதவீதமாக குறைத்து, மறைமுக சம்பள வெட்டு நடைமுறையை செய்துள்ளது . இதை கண்டித்து, அக்., 18ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.