மேலும் செய்திகள்
ஊராட்சி நிர்வாகங்களுக்கு தனி அலுவலர்கள் நியமனம்
08-Jan-2025
சென்னை:ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது. எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள் வழக்கமான தேர்தலை நடத்த இயலாது. எனவே, இந்த ஊராட்சிகளில், 2025 ஜூலை 5 அல்லது வழக்கமான தேர்தல் நடத்தப்படும் தேதியில் எது முந்தியதோ, அதுவரை தனி அலுவலர்கள் நியமனம் செய்ய, அரசுக்கு அதிகாரம் வழங்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. ஊராட்சிகளில் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக, தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் மற்றும் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செல்லுபடியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-Jan-2025