உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து

அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் (ஏப்.,4), நாளையும் மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதற்கடுத்து இன்று இரவு மதுரை வருவதாகவும், நாளை தென்காசி, கன்னியாகுமரி செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது அமித்ஷாவின் தமிழக வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப்.,4) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டுவதாகவும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 5ம் தேதி தென்காசி, கன்னியாகுமரியில் பா.ஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வருவதாகவும், நாளை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி சென்று 'ரோட் ஷோ' நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சுற்றுப்பயண திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ''தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக'' போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஏப் 04, 2024 23:53

இனிமேல் நீ வயசுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற கதை தான்!


பல்லவி
ஏப் 04, 2024 22:32

பாவம் பிரதமர் நாற்காலி யாருக்கோ ?


Sriniv
ஏப் 04, 2024 22:23

take care of your health Sir


Narayanan Muthu
ஏப் 04, 2024 20:10

என்னத்த வந்து என்ன செய்ய தமிழக மக்கள் அதி புத்திசாலி என்பதை மீண்டும் நிரூபிக்க போகிறார்கள் யார் ஜெயிப்பார்கள் என்பது இரண்டாம் பட்சம் பிஜேபிக்கு மட்டும் வாய்ப்பே இல்லை


Senthoora
ஏப் 04, 2024 20:08

எட்டா பழம் புலிக்குமாம், புத்தி உள்ள அறிவாளி,


திகழ்ஓவியன்
ஏப் 04, 2024 19:54

பாவம் ௧௦ வருடம் என்ன செய்தோம் என்று வோட்டு கேட்க துப்பின்றி , ௫௦ வருடம் முன்னர் இந்திரா ஆயா செய்த தவறை சொல்லி வோட்டு கேட்க எண்ணினால் இப்படி தான் ஆகும்


Kasimani Baskaran
ஏப் 04, 2024 16:51

பேரின்பம் அதுக்காக நீட்டை நீக்கிவிட்டோம், காவிரிப்பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டோம், சாராயக்கடைகளை மூடி விட்டோம், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம், ஊழலை ஒழித்துவிட்டோம் என்றெல்லாம் ஓட்டுக்கேட்க முடியாது வசூல் மெசினையே கூட வெளியே கொண்டு வர முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்றிவிடப்போகிறார்களாம்


Velan Iyengaar
ஏப் 04, 2024 16:45

எவ்வ்ளோ பாவம் சாமி எவ்வ்வ்ளோ பயம் சாமி இருக்காதா பின்ன ஹி ஹி ஹி


MARUTHU PANDIAR
ஏப் 04, 2024 16:36

உங்கள் நேரம் , சக்தி , இவற்றை கூடுதலாக வாடா மாநிலங்களிலேயே செலவிடுவது சாலச் சிறந்தது +++ நன்றாக , ஆக்க பூர்வமாக , சந்தேகத்துக்கிடமின்றி குறிக்கோளை எட்ட வாய்ப்பு மிக மிக அதிகம் + உங்களால் எவ்வளவு முறை வந்தாலும் மாற்ற முடியாது


Karthikeyan
ஏப் 04, 2024 16:07

என்ன தான் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவை தாண்ட முடியாது ஆகவே பிரச்சாரத்தை கைவிடுவதே மேல் என நினைக்கிறாரோ


Selvakumar Krishna
ஏப் 04, 2024 16:44

உண்மைதான் நோட்டா உடன் மாத்திரமே


naadodi
ஏப் 04, 2024 17:52

அது தமிழர்களின் தலைவிதி


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ