உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்

அமித் ஷா வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்

துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழரை, பிரதமர் மோடி நிறுத்தி உள்ளார். தி.மு.க., தமிழரை எதிர்க்கிறது. தி.மு.க., காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் துணை ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்து ஓட்டளிக்க வேண்டும். விஜய் மாநாட்டால் தாக்கம் ஏற்பட்டிருப்பது போல பேசுகின்றனர். அதைவிட, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அவர், அனைத்து மாநிலங்களிலும், வெ ற்றியை நிரூபித்து காட்டியவர். திருநெல்வேலியில் நடக்கும் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு பூத்திற்கு ஆட்கள் இல்லை என்று யாரும் பேச முடியாத அளவுக்கு சரித்திர ம் படைப்போம். - தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Velayutham rajeswaran
ஆக 22, 2025 11:56

இதுவரை அமித்ஷா தமிழகம் வந்து என்ன தாக்கம் நிகழ்ந்து விட்டது நகைச்சுவை ரொம்ப அதிகம்


புதிய வீடியோ