உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவி அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி சஸ்பெண்ட் : அன்புமணி வலியுறுத்தல்

மாணவி அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி சஸ்பெண்ட் : அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் எப்.ஐ.ஆர்., ஐவெளியிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ,'' பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=66hz7e23&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர் குற்றவாளி ஒருவனால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக, அந்த மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களுடன் கூடிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியில் கசியவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. போலீசாரின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.மாணவியை இரக்கமற்ற மனித மிருகம் உடல்ரீதியாக வன்கொடுமை செய்தால், போலீசாரோ மனரீதியாக வன்கொடுமை செய்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை சார்ந்த வழக்குகளில் எத்தகைய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கூட தெரியாத அதிகாரிகளால் கையாளப்படும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்குமா? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட ஒருவரைத் தவிர இன்னொருவர் யார்? என்று தெரியவில்லை. அவரை பாதுகாக்கும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் சோர்ந்து போகச் செய்யும் நோக்குடன் தான் போலீசார் இவ்வாறு செய்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளியிட்ட போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
டிச 27, 2024 12:58

என்ன அவசரம்? இன்னும் ரெண்டே நாளில் அந்த மாணவியின் பூர்வீகத்தோட சேத்து இட்டு கட்டி....


sankaranarayanan
டிச 27, 2024 07:51

மாணவி அடையாளத்தை வெளியிட்ட அதிகாரியை மட்டும் சஸ்பெண்ட் செய்தால் போதவே போதாது அந்த அதிகாரியின் அரசையே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்


சம்பா
டிச 27, 2024 06:10

அரசியல் செய்யாம அவியல செய்வாங்கனு முன்னர்


D.Ambujavalli
டிச 27, 2024 05:51

அந்த மாணவி தொடர்ந்து படிக்கவோ, வெளி உலகில் பணிக்கு செல்லவோ இயலாமல் ஓர், உலகின் விரல்கள் சுற்றுவதும், பெற்றவர்கள் மீது பாயும், முதலில் பரிதாபம், பின்னால் அதுவே அனாவசிய வம்புகள் என மாறி அவரது எதிர்காலத்தையே இருளடையச்செய்யும் இந்தப் படுபாதகத்தை போலீஸ் செய்வது, மாணவி, அவர் குடும்பம் பயந்து, வெறுத்துப்போய் விட்டால் போதும் என்று கேஸை வாபஸ் வாங்க வைக்கும் உத்தியாக இருக்கும் அந்தப்பெண் வாக்குமூலம் வெளிவரும் முன்பே இவர்கள், ஒருவன்தான் குற்றவாளி என்று அடித்துச் சொல்லுவானேன் எந்தப் பெருந்தலையின் வாரிசாவது இருக்கலாமோ என்றே தோன்றுகிறது


சம்பா
டிச 27, 2024 02:25

செய்ய மாட்டான்


V வைகுண்டேஸ்வரன், chennai
டிச 26, 2024 22:53

200 ரூவா ஊ ஃபீஸ் யாரையும் காணோம்...?


T.sthivinayagam
டிச 26, 2024 21:20

பாலியல் வன்கொடுமை செய்தவன் அயோக்கியன் தான். அவன் எந்த கட்சி ,எந்த மதம் ,எந்த ஜாதி ,அவனுடைய மாமா எந்த கட்சி என்று அரசியல் செய்வது அதை விட கேவலமானது.


திகழ் ஓவியன், Ontario
டிச 26, 2024 22:49

அகர்தலா, அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்...? எங்கேயோ கேட்டதில் பிடிச்சது


Raj S
டிச 26, 2024 23:26

அவங்க அரசியல் செய்யறாங்கனு பிதற்றுபவர்கள் தான் கேவலமா இருக்காங்க... எதிர்ப்பு எதற்காகனாலும் அது இந்த தருணத்தில் மிகவும் சரி... எதற்கும் லாயக்கில்லாத திருட்டு கும்பல் கைல இந்த தமிழகம்...


Palanisamy Sekar
டிச 26, 2024 21:09

பல்கலையில் மாணவர்களின் அமைப்புகள் இப்பொது திமுக வசமாக மாறிவிட்டதா என்ன? அல்லது கஞ்சா போதையில் உறக்கத்தில் இருக்கின்றனரோ? கொதித்து எழ வேண்டாமோ இந்நேரம். யாருக்கோ இது என்று கடந்துபோகும் மனதை ஓரங்கட்டி ஒன்றுபட்டு போராட வாருங்கள் மாணவர்களே. ஆட்சியாளர்கள் மீது பயமா உங்களுக்கு? அண்ணாமலை பல்கழகத்தில் உதயகுமாரை கொன்றது போல நமக்கும் ஏதாகினும் ஆகிடுமா என்று ஒடுங்கி ஓரமாய் ஒழிந்துகொண்டுவிட்டீர்களா மாணவர்களே. பெண்ணியம் பேசுகின்ற உத்தமர்கள் எங்கே காணோம். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்திலாவது ஒன்றுபட்டு நின்று வீதியில் இறங்கி போராடியிருக்க வேண்டாமோ இந்நேரம்? என்ன அரசியல் இது? எங்கே போய்க்கொண்டுள்ளோம் நாம். நமக்கும் நம் வீட்டிலும் தாயாக மனைவியாக பெண்குழந்தையாக எதோ ஒரு வடிவில் பெண் இருக்கின்றாள் அவளுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பு வேண்டுமென்று இந்நேரம் வீதியில் இறங்கி நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராடாமல் எங்கே போனீர்களோ மாணவர்களே..


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 21:03

அந்த அதிகாரிகளின் படத்தை விலாசத்தை வெளியிடுங்க , மற்றவர்கள் சாணியை கரைத்து அவர்கள் மீது ஊற்றினால் என்னாகும் என்பதனை அறியட்டும்


Ramona
டிச 26, 2024 20:19

கனம் கோர்ட்டார் ஏன் இன்னமும் மெளனமாக உள்ளனரோ, அகண்ட பாரதத்தில் இந்த பாதக செயலை கண்டிக்காமல் மக்களின் ,மாணவர்களின் ஆழ்ந்த உறக்கம் எப்போது கலையுமோ?


Raj S
டிச 26, 2024 23:30

வருவாங்க மெதுவா... நீ ஏன் இப்டி செய்யல, அவன் ஏன் இப்டி செஞ்சான்னு கிராமத்துல கிழவன், கிழவிங்க வெட்டி பேச்சு பேசறமாதிரி ஏதாவது பேசுவானுங்க... கேடு கேட்ட நீதிமன்றங்கள் இருப்பதால் பல திருடர்கள் இப்போது திராவிட போர்வையில் இருக்கிறார்கள் தமிழகத்தில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை