உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலாறில் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீர்: கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரியம்

பாலாறில் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீர்: கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரியம்

வேலுார்: பாலாறில் கலக்கும் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீரால், வேலுாரில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கணக்கநேரியில் தனியார் மாம்பழ கூழ் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வேலுார் மாவட்டம், கண்டிப்பேடு அடுத்த உள்ளிப்புதுார் ஏரியில் கலந்து, பொன்னையாறு வழியாக பாலாற்றில் கலக்கிறது. தற்போது மழை காரணமாக ஆந்திர ஏரிகளில் பாயும் நீர், தமிழக ஏரி, கால்வாய்க்கு வருகிறது. ஏரி நீர் மிகவும் மாசடைந்துஉள்ளதால், விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மாம்பழ கூழ் தொழிற்சாலையின் கழிவுநீரால், உள்ளிப்புதுார் உட்பட, 50 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் போது ஏராளமான நோய் பரவுகிறது. தோல் அரிப்பு ஏற்படுகிறது. ஏரிகளில் மீன்களும் செத்து மிதக்கின்றன. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தினர், வேலுார் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது: கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை தென்காசி, கோவை உள்ளிட்ட இடங்களில் கொட்டும் போது மக்களின் எதிர்ப்பால், அதை கேரள அரசு திரும்ப பெற்று கொள்கிறது. ஆனால், ஆந்திர அரசு தொடர்ந்து தனியார் நிறுவன கழிவுநீர், பாலாறில் கலப்பதை கண்டு கொள்வதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், அதன் முடிவை அறிவிப்பதில் மெத்தன போக்கை கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
நவ 09, 2025 09:48

அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய மாமூல் கிடைத்தபிறகு அவர்கள் எப்படி கண்டுகொள்வார்கள். மாமூல் கிடைத்தபிறகு கண்டுக்காம போகத்தான் மாமூல்.


duruvasar
நவ 09, 2025 08:21

துரை முருகன் ஐயா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் ஏனனில் அவருக்கு சொந்தமான விவசாயம் நிலங்கள் பாலாறு தண்ணீரில் தான் சாகுபடி செய்ய படுகிறது என்பது பரவலான பேச்சு


Sampath
நவ 09, 2025 07:23

நாங்கதான் காசு குடுத்துட்டோமுல்ல ? இன்னும் என்ன சேயோனும்


Kasimani Baskaran
நவ 09, 2025 06:34

இரும்புக்கரத்தை உபயோகப்படுத்தாமல் வைத்தால் துருப்பிடித்து விடும் என்பதை உடன்பிறப்புகள் யாராவது எடுத்துச்சொல்லவேண்டும்.


Vasan
நவ 09, 2025 05:45

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட, மாசு மற்றும் நச்சு பொருட்கள், கேரளத்திற்க்கே திருப்பி அனுப்பப்பட்டன. அது போல், ஆந்திர மாசு மற்றும் நச்சு பொருட்களும், ஆந்திராவுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட வேண்டும். இதை தமிழக எல்லைப்படை உறுதிப்படுத்த வேண்டும்.


Vasan
நவ 09, 2025 03:30

ஆந்திர மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளை பரிசோதனை செய்யாததே காரணம். இதில் அனுமதி இன்றி இயங்கும் தொழிற்சாலைகள் வேறு.


திகழ் ஓவியன் AJAX ONTARIO
நவ 09, 2025 01:30

எங்கே அந்த வீணா போன இரும்புக்கரம்...?


முக்கிய வீடியோ