உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பல்லோவில் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம்: இதய பரிசோதனை

அப்பல்லோவில் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம்: இதய பரிசோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தலைச்சுற்றல் காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, 'ஆஞ்சியோகிராம்' எனப்படும் இதயப் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. இதில், இதயம் பாதிப்பின்றி இயல்பாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 72, கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீர் தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டார்; பின், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 'மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்' என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தபோது, சீரற்ற இதயத் துடிப்பு இருந்தது தெரிய வந்தது. அதற்கு, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

அழகிரி பார்த்தார்

இந்நிலையில், நேற்று இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி, முதல்வரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கி உள்ளனர். முதல்வரின் அண்ணன் அழகிரி நேற்று வந்து பார்த்து சென்றார். முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் பிரச்னை காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாக, இந்த தலைச்சுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர், அவற்றை சரி செய்வதற்கான சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், வேறு ஏதேனும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதயம் இயல்பாகவே உள்ளது. தற்போது முதல்வர் நலமுடன் உள்ளார்; தன் வழக்கமான பணிகளை, இரண்டு நாட்களில் மேற்கொள்வார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நலமுடன் உள்ளார்

அமைச்சர் துரை முருகன் அளித்த பேட்டியில், ''முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது; நலமுடன் உள்ளார். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பர்,'' என்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ''முதல்வரை பார்க்க முடியவில்லை. மருத்துவரை சந்தித்து பேசினேன். சிறிய மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பிரார்த்தனை காரணமாக, முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்,'' என்றார். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் நேற்று மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Rajasekar Jayaraman
ஜூலை 25, 2025 23:11

அது இருக்கா இருந்தா மக்கள் இவ்வளவு துன்பப்பட மாட்டார்கள்.


theruvasagan
ஜூலை 25, 2025 22:16

பிரார்த்னையா யாரு செஞ்சிருப்பாங்க. கோவிலுக்கு போய் கும்பிட்டு பிரார்த்தனை செய்வது பகுத்தறிவுக்கு விரோதம்மாச்சே அதை எப்படியும் ஏத்துக்க மாட்டார். ஓ...அப்ப ஜபம் செய்து வேண்டியிருப்பாங்களோ. கண்டிப்பாக. அவங்க போட்ட பிச்சையால வந்த ஆட்சியாச்சே. அதை நம்புவார். ஏத்துப்பார்.


Anand
ஜூலை 25, 2025 20:39

அடுத்த தேர்தலுக்கு பிறகு, மகா ஊழல் வழக்கில் இவருக்கு பெரிய ஓய்வாக ஜெயிலுக்கு அனுப்பி விடுங்கள்


ManiK
ஜூலை 25, 2025 20:14

ஆமாம் நாங்க பிரார்த்தனை செய்யனும். திருப்பரங்குன்றம் மலை மற்றும் எல்லா கோவில்களையும் அறமில்லாத துறைகிட்டேயிருந்து மீட்டுத்தர சொல்லுங்கள். ஹிந்துகைகளின் உரிமையை இனிமேலாவது பறிக்காம இருக்க சொல்லுங்க. அப்போ பிரார்த்திக்கிறோம்.


Ganapathy
ஜூலை 25, 2025 18:00

என்ன செய்ய...கோவிலுக்கும் போகப்படாது...சாமியை கும்பிட்டா பகுத்தறிவு இன்னாவுறது? பேசாம பொண்டாட்டிய திருப்பதி அனுப்பி திருட்டுத்தனமா திருப்பதி லட்ட திங்க வேண்டியதுதான்..


Ganapathy
ஜூலை 25, 2025 17:57

போட்டோவுல ஏன் இப்படி எதையோ பாத்து அரண்டுபோய் முழிக்குறாரு? ஒரு வேளை இதுதான் திராவிடப் பார்வையா?


karupanasamy
ஜூலை 25, 2025 17:33

அரசு மருத்துவமனையில் எடுக்கும் சிகிச்சைக்கு மட்டுமே மக்களின் வரிப்பணம், தனியார் மருத்துவமனை சிலவுகளுக்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்த கூடாதென்று யாரேனும் வழக்கு தொடுக்க வேண்டும்.


Santhanakrishnan Ramachandran
ஜூலை 25, 2025 17:30

27/7/2025 அன்று பிரதமர் தமிழக கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வருவதால் அங்கு செல்வதை தவிர்க்க இது போன்ற ஒரு நாடகம் நடத்தியுள்ளார் முதல்வர், அங்கு சென்றால் ஆயுளுக்கு ஆபத்து என்று ஜோசியர் கூறியதால் துர்க்கை அம்மையாரின் ஆலோசனை படி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி


Sridhar
ஜூலை 25, 2025 15:20

ஓ அப்போ இருக்கா? சரிசரி, மேலதான் இல்லையோ?


ஆரூர் ரங்
ஜூலை 25, 2025 14:21

ஜாதகப்படி நாலைந்து நாள் நேரம் சரியில்லாததால் வீட்டில் இருக்கக் கூடாதாம். நம்ம செலவில் தெலுங்கு ஆஸ்பத்திரியில் இருக்கலாம்?. அப்படியா?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை