உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக கவர்னர் ரவியை நேரில் சந்தித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்ற தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pjuf3tw7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, சம்பவம் குறித்த எப்.ஐ.ஆர்., வெளியாகி, அதில் மாணவியின் பெயர் விவரங்களும் வெளியாகி பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நடந்த சம்பவம், எப்.ஐ.ஆர்., வெளியானது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று 30ம் தேதி மாலை வலியுறுத்தினார்.முன்னதாக, இன்று மதியம் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயும் கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

AMLA ASOKAN
டிச 31, 2024 09:58

எதோ சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வீராங்கனையை போற்றுவது போல் ...


INDIAN
டிச 31, 2024 09:34

அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வில்லை என்றாலும் பல்கலை கழக வேந்தர் என்ற முறையில் தனக்கே அதிகாரம் என்று சொல்லக்கூடிய ஆளுநர் அவர்கள் இதற்கு மட்டும் எனக்கு பொறுப்பில்லை என்று கூறமுடியுமா? அப்படி அதற்க்கு பொறுப்பானவரிடமே மனுக்கொடுப்பது எப்படி சரியாக இருக்க முடியும். பாதிக்கப்பட்ட பெண்ணின் FIR விவரங்கள் வெளியானதில் பின்னணியில் 16 IP அட்ரஸில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அப்படியானால் அவர்களை அடையாளம் காணுவதில் என்ன சிக்கல் இருக்க முடியும். அதையேன் அண்ணாமலை வலியுறுத்த மாட்டேன் என்கிறார்.


N.Purushothaman
டிச 31, 2024 07:47

யார் அந்த சார் .... அந்த கட்சியில இருக்குற ஏதாவது பொம்பளயோட பையனாத்தான் இருப்பான் ...


INDIAN
டிச 31, 2024 09:35

நீங்கள் ....?


N.Purushothaman
டிச 31, 2024 07:44

முரபோக்குவாதிகளான திருட்டு திராவிடனுங்க இந்த சம்பவத்திற்கு பெறவு பிற்போக்கு வாதியா மாறி அந்த மாணவியை எப்படி எல்லாம் பேசுறானுங்க பாருங்க .....டேய் .... மண்ணை வாரி தூற்றிய அந்த ஆயாவை இன்னமும் தொரத்திக்கிட்டு தான் இருக்கீங்களா ?


Guna Gkrv
டிச 31, 2024 07:42

ஏன் மணிப்பூரில் போய் சாட்டையால் அடித்து கொள்ளவில்லை அங்கு எத்தனை 100 பெண்களை ஆடை இல்லாமல் இழுத்து சென்றார்கள் அப்ப எங்க கோமாவில் இருந்திர்களா ? ஏன் என்றால் அங்கு நடப்பது பிஜேபி அரசாங்கம் அங்க போய் அடித்தால் உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள் அதனால் இங்கு நாடகம் ஆடுகிறீர்கள் .


ghee
டிச 31, 2024 10:05

இன்னுமா மணிப்பூர் பைத்தியங்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்


Ravi
டிச 31, 2024 06:05

Why there’s no comment from honourable governor? It looks like he is feeling guilty of his failure.


Ravi
டிச 31, 2024 06:05

Why there’s no comment from honourable governor? It looks like he is feeling guilty of his failure.


Ravi
டிச 31, 2024 06:05

Why there’s no comment from honourable governor? It looks like he is feeling guilty of his failure.


சாண்டில்யன்
டிச 31, 2024 04:35

அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லைன்னு அவங்கவங்க வேலைய பாக்க போய்ட்டாங்க. நியூ கஜினி இந்த முயற்சியும் தோல்வியடைஞ்சதுல வெறுத்துப்போய் செருப்பை கழட்டி வீசிட்டு சவுக்கால் அடிச்சுகிட்டு கோயில் கோயிலா போறாரு


சாண்டில்யன்
டிச 30, 2024 21:49

சம்பவமே சந்தேகத்துக்குரியதாகி விட்டதே மூலக்கதை டில்லிபாபு திரைக்கதை வசனம் உள்ளூர் அடிப்பொடிகள் க்ளைமாக்ஸ் சாட்டை மலை காமிக் லேட்டஸ்ட் சொகுசு விஜய்


முக்கிய வீடியோ