உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் கையில் முழம் போடும் தி.மு.க; அண்ணாமலை குற்றச்சாட்டு

வெறும் கையில் முழம் போடும் தி.மு.க; அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், வெறும் கையில் முழம் போடுவதை தி.மு.க.,வினரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வாங்க இந்த ஆண்டு ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, சட்டசபையில் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், உயர்கல்வி மானியக் கோரிக்கையிலோ அல்லது தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையிலோ இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் அமைச்சர்? தமிழக மாணவர்களையா?எப்படியும் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க இயலாது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பிறகு ஏன் இந்த வெற்று அறிவிப்பு?நிதியே ஒதுக்காமல், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என எப்படி கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார் தமிழக நிதியமைச்சர்? மானியக் கோரிக்கையில், விலையில்லா மடிக்கணினி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எந்த நிதியை வைத்து, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப் போகிறார், எப்போது வழங்கப் போகிறார் என்பதை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அண்ணாமலை அறிக்கையுடன் வீடியோ வடிவிலும் சுட்டிக்காட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Mahesh Mu
மார் 22, 2025 14:03

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா? நீங்களே முடிவு செய்யுங்கள்: 1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம். 2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்றால் கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும், ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாகப் போட்டியிடலாம். அவர் பிரதமராகவும் இருக்க முடியும் 4. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம். 5. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் 10 கிலோமீட்டர் ஓடி காட்ட வேண்டும். ஆனால் அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், ஊனமுற்றவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு கட்டளையிடலாம். அவருக்கே எதிராக எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்துறை அமைச்சராகவே இருக்கலாம். 6. ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையறையும் உண்டு. ஆனால் ஒரு எம். எல். ஏ, எம்.பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, 5 வருடம் லஞ்சம், ஊழல் மற்றும் எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும், இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?


अप्पावी
மார் 22, 2025 13:32

வடக்கே வாயால் வடை. இங்கே வெறுங்கையால் முழம். பஞ்சால் ஆன சாட்டையடி.


Ilamurugan Manickam
மார் 22, 2025 13:28

Hindi-speaking states are only dominant in politics due to the sheer number of voters, and they keep demanding the domination of Hindi all over the country without focusing on their development.


Pandianpillai Pandi
மார் 22, 2025 13:24

என்னங்க நீங்க போங்க. அண்ணாமலை அவர்களே நீங்க அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க . தி மு க மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு செய்து அதற்க்கான விண்ணப்பங்களை உடனடியாக பெற்று சற்றும் தாமதிக்காமல் அந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களெல்லாம் பெற்ற பிறகுதான் அந்த திட்டத்திற்கு பெயர் வைத்தார்கள் என கருதுகிறேன். ஆக தி மு க வின் ஆற்றலை உணராமல் புல்லாங்குழல் ஊதக்கூடாது. ஆடு மேய்க்கும்போது புல்லாங்குழல் இசைத்து பொழுதை கழிப்பது போல் மக்கள் பணியில் கழிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


Venkataraman
மார் 22, 2025 12:28

மக்களின் வரிப்பணத்தில் சுய விளம்பரம் தேடிக்கொள்ள, பொழுது போகாத சிலரை கூட்டி நாடகமாடுகிறார்கள்


Venkataraman
மார் 22, 2025 11:46

இந்த பட்ஜெட் முழுவதும் மக்களை ஏமாற்றும் முயற்சி. இதில் குறிப்பிட்டுள்ள எந்த திட்டமும் நிறைவேற்ற முடியாதவை. மாநில பொருளாதாரம் திவிலா ஆகும் நிலையில் உள்ளது. மத்திய அரசு கொடுத்த நிதி அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு கொடுத்த நிதிக்கு கணக்கு கேட்டால் திமுக அரசு கொடுப்பதில்லை. அமைச்சர்கள் அனைவரும் வாய் சவடால் செய்கிறார்கள். சென்ற 3 ஆண்டுகளில் அறிவித்த எந்த திட்டங்களையும் இதுவரை நிறைவேற்றவில்லை


Madras Madra
மார் 22, 2025 11:23

எங்களுக்கு கொள்ளை அடிக்கவே பணம் போதவில்லை எப்படி மடி கணினி கண்டதுக்கெல்லாம் நிதி ஒதுக்க முடியும் நீ பேசாம இருக்க எவ்ளோ கேக்கற அண்ணாமலை


Raja k
மார் 22, 2025 09:51

வெறும் வாயால் வடை சுடும் அண்ணாமலை


Guna Gkrv
மார் 22, 2025 09:38

அண்ணாமலை உனக்கு திராணி இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு நிதியை வாங்கி கோடு, மத்திய அரசு கொடுத்தால் தான் கொடுக்கமுடியும் இல்லை என்றால் வெறும் கையில் மூலம் போடத்தான் முடியும் இது தெரியாதா மரமண்டை அண்ணாமலை வாய் கிழிய பேசும் அண்ணாமலை வாங்கி கொடுக்க வக்கில்லை அதை விட்டு பேசக்கூடாது


Bala
மார் 22, 2025 14:11

மெத்த படித்த நேர்மையான பத்தாண்டுகாலம் காவல் துறையில் பணியாற்றி மக்களின் அன்பையெல்லாம் பெற்ற தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் . திமுக வுக்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமரவைத்தது. தமிழக மக்கள் திமுக வைத்தான் கேள்வி கேட்பார்கள் குணா. மக்களின் வரிப்பணத்தையும் டாஸ்மாக் பணத்தையும் ஆட்டைய போட்டுவிட்டு மத்திய அரசிடம் பிட்சை கேட்க திமுகவிற்கு வெட்கமாக இல்லை ? ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்கள். மக்கள் வேறு ஒரு கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைப்பார்கள்.


பேசும் தமிழன்
மார் 22, 2025 09:38

அவர்கள் இப்படியே தான் எதையாவது சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.... இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.... ஏதோ சென்ற முறை தவறு செய்து விட்டார்கள்...... இவர்கள் சொன்ன பொய்யை நம்பி ஓட்டு போட்டு விட்டு இப்போது புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை