உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரம் குறைந்த இலவச சைக்கிள்; அண்ணாமலை கண்டனம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரம் குறைந்த இலவச சைக்கிள்; அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, கோவை எம்பி மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்று வழங்கிய சைக்கிள்கள், சரியாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், இப்படி தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cfy35iqu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டுகளிலும், இது போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்தும், பல மாணவர்கள் அவற்றை விற்பனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதே பிரச்சினை தொடர்கிறது. இந்த சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார்? ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் கோவை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?கோவையில் மட்டும் இந்த ஆண்டு, 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் 4 ஆயிரத்து 300 ரூபாய் விலை என்று திமுக அரசால் கூறப்படும் சைக்கிள்கள், இப்படி அடிப்படைக் குறைபாடுகளைக் கூட சரிசெய்யாமல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே, அனைத்து சைக்கிள்களும், தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும், தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M.S.Jayagopal
டிச 08, 2025 08:59

திராவிட கட்சியினரும் ஊழலும் நகமும் சதையும் போல. இந்த திட்டத்தை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாணவர்களையே மிதிவண்டிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அனுமதித்து ,அதற்காக ஒரு மான்யத்தொகையை அவர்கள் வாங்கி கணக்குகளில் செலுத்தலாம்.


rama adhavan
டிச 08, 2025 01:35

நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இயலாதா? மாணவர்களின் பெற்றோர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? சமூக நல சங்கங்கள் ஏன் வாய் மூடி உள்ளனர்? மற்ற கட்சிகள் ஏன் மௌனம்?


குடிகாரன்
டிச 07, 2025 20:29

திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கும் அனைத்து இலவச/ விலையில்லா பொருட்கள் அனைத்தும் தரம் கெட்டவை தான். சந்தேகம் வேண்டாம்.


Ramesh Sargam
டிச 07, 2025 20:14

தரம் குறைந்த திமுக அரசிடம் தரம் எதிர்பார்ப்பது நமது தவறு.


sundarsvpr
டிச 07, 2025 19:58

நாஸ்திக அரசு வழங்கிய பொருள்கள் தரம் அரசு தரத்திற்கு ஏற்றபடிதான் அமையும். மக்கள் ஆஸ்திகர்கள் . கடவுள் பார்க்கிறார் என்ற எண்ணத்தில் தரம் அற்ற பொருள்களை பெற்று செல்கிறார்.


Iyer
டிச 07, 2025 19:49

இப்போதெல்லாம் சிறுவயதிலேயே சக்கரை, BP , THYROID , OBESITY போன்ற வியாதிகள் பெருகிவிட்டன. ஆகையால் மாணவ மாணவியருக்கு - FUEL RUN VEHICLES - ஓட்டுவதை தடை செய்து சைக்கிள் ஓட்டுவதை கட்டாயம் ஆக்கணும்.


தமிழ்வேள்
டிச 07, 2025 19:33

ஸ்ரீ அண்ணாமலை ஜி, 60சதம் கமிஷன் 20சதம் லாபம் போக சைக்கிள் சக்கரம் மட்டுமே தரமுடியும்..திமுக தேனடையை அப்படியே விழுங்கி ஏப்பம் விடுகிறது... சுரணை கெட்ட டுமீலனுக்கு இனி எதுவும் மண்டையில் ஏறாது...


கடல் நண்டு
டிச 07, 2025 19:23

பல அரசு பள்ளிகள் மாணவர்கள் பயிலும் வகையிலான தரத்தில் இல்லை .. இந்த சூழலில் , விளம்பர திராவிட ஆட்சியில் தரமற்ற மிதிவண்டி வேறு..


MUTHU
டிச 07, 2025 19:19

எல்லாவற்றையும் எவனாவது செய்யட்டும் என்று நாம் பார்த்துக்கொண்டே இருப்போம். அப்புறம் முக கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போடுவோம்.


Anantharaman Srinivasan
டிச 07, 2025 18:00

அரசு வழங்கும் எல்லா பொருட்களுமே உயர் விலையில் டெண்டர் விட்டு தரம் குறைந்த பொருட்களை கொடுப்பது தானே.? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரம் குறைந்த இலவச சைக்கிள் .கொடுத்திருப்பதை அண்ணாமலை ததகவல் பெ.ரும் உரிமை சட்டம் வாயிலாக வெளிப்படுத்தி வழக்கு தொடுக்கலாமே..


vivek
டிச 07, 2025 19:56

அண்ணாமலை சொல்வது சில அறிவிலிகள் மண்டையில் ஏறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை