தி.மு.க.,வை நெருக்கடிக்கு உள்ளாக்கியவர் அண்ணாமலை: நாராயணன் திருப்பதி
தி.மு.க.,வை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை. அவரைப் பற்றி தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்பது அமைச்சர் கோவி.செழியனுக்கு நல்லது. அண்ணாமலையால், தி.மு.க.,வினர் துாக்கமின்றி தவித்ததும், இன்னும் தவித்துக் கொண்டிருப்பதும், உலகறிந்த உண்மை. அண்ணாமலை காலாவதியானவர் அல்ல; அவர் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும். அப்போது, செழியன் காலாவதியாகி இருப்பா ர். - - நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,