உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெண்டுல ஒண்ணு தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

ரெண்டுல ஒண்ணு தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரதமர் மோடிக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stebcf9b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என்றார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால், சமீபத்தில் பா.ஜ., பெற்றுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதி பங்கீடு அமைய வேண்டும். கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணி, 11.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நான்காவது இடத்திற்கு சென்றது. இரண்டாவது இடத்தை, பா.ஜ., கைப்பற்றியது. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ., போட்டியிட வேண்டும்.அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியை, பா.ஜ., கேட்டுப் பெற வேண்டும். அப்படி செய்தால் தான், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வழி ஏற்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mahendran Puru
ஜூன் 13, 2025 17:29

கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதில் கடிதம் எழுதுவதும் சேர்ந்தது.


madhesh varan
ஜூன் 13, 2025 12:04

இவர், மீண்டும் திமுகவே ஆட்சியமைக்க போராடுறார் போலிருக்கே ? இவர விடாதீங்க, இவன் வாய தொறந்தாலே போதும், பிஜேபி சீக்கிரம் டெபாசிட் போகி தோத்துடும், இவரே ஜெயிக்கமாட்டார்,


madhesh varan
ஜூன் 13, 2025 12:01

இவர் திமுகவின் அல்லக்கை , இனிமேலு அண்ணாமலையை பேசவச்சா, திமுக மிக சுலபமா வெற்றிபெறும்,


Pascal
ஜூன் 13, 2025 10:48

234ல் 134ல் போட்டியிடட்டும்.மிச்சம் உள்ளதில் அதிமுக, தவெக, சீமான், மற்றும் உள்ள உதிரிக்கட்சிகள் போட்டியிடட்டும்


Jayaraman Natesan
ஜூன் 13, 2025 10:34

நல்ல ஐடியா


venugopal s
ஜூன் 12, 2025 15:54

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்க கழுதை மேய்க்க, மன்னிக்கவும் ஆடு மேய்க்க!


vijay
ஜூன் 13, 2025 16:27

உனக்கு 200 ரெடி.


Sridhar
ஜூன் 12, 2025 13:31

சரிதான். அப்போதுதான் எடப்பாடிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சி தவிர்க்கமுடியாதது ஆகிவிடும். ஆனால், அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒருவேளை அதிமுகவுக்கு 90 பிஜேபிக்கு 40 கிடைக்குதுனு வச்சுக்குவோம். மிச்ச தொகுதிகள்ல திமுக 30, விஜய் 50 சீமான் இத்தியாதிகள் 24 னு வந்திச்சின்னா, எடப்பாடி உடனே மகாராஷ்டிரா உதவா தாக்கரே போல விஜயோட சேர்ந்து ஆட்சி அமைப்பார். அது முடியலேன்னா தீமுகவோட ஆதரவுல ஆட்சி. நிச்சயமா ஒருபோதும் பிஜேபி யை ஆட்சியில சேக்க திராவிட மனசு ஒப்புக்கொள்ளாது.


Bala
ஜூன் 12, 2025 12:46

திரு அண்ணாமலை அவர்கள் சொல்வதுதான் சரி


haja kuthpudeen
ஜூன் 12, 2025 12:32

விஜய் இப்பத்தான் ஒரு உருப்படியான கருத்தை, வன்மம் ஏதுமில்லாமல், இங்கு பதிவிட்டுள்ளார்...வாழ்த்துக்கள்...


Balasubramanian
ஜூன் 12, 2025 12:30

நாம் முன்பே சொன்னபடி 84 தொகுதிகளில் பாஜக போட்டி இட்டால் 83 தொகுதிகளில் வெற்றி பெறும்! அதிமுக 150 இல் போட்டி இட்டு 60 இல் வெற்றி பெறலாம்! ஆக தேசிய ஜனநாயக கூட்டணி அமைவது நிச்சயம்!


சமீபத்திய செய்தி