| ADDED : பிப் 11, 2024 01:55 AM
கடலுார்: கடலுார் அழகப்பா நகை மாளிகையில் ஆண்டு விழா சிறப்பு விற்பனை துவங்கியது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில், 57 ஆண்டுகளாக அழகப்பா நகை மாளிகை நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மற்றொரு கிளை சுப்புராய செட்டித் தெருவில் உள்ளது.அழகப்பா நகை மாளிகையின் 57வது ஆண்டு விழா சிறப்பு விற்பனையை உரிமையாளர்கள் அழகப்பா மணி, அஸ்வின், அசோக் துவக்கி வைத்தனர். இதுகுறித்து உரிமையாளர்கள் கூறுகையில், 'கடலுாரில் அழகப்பா நகை மாளிகைகள் அழகப்பா ராஜகோபால் மேற்பார்வையில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 916 ஹால் மார்க் தங்க நகைகள் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளது.தங்க நகை சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம். சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டரின் பேரில் நகைகள் செய்து தரப்படும். பழைய நகைகளை வேறு கடைகளில் வாங்கி இருந்தாலும், அன்றைய விலைக்கே மாற்றி தருகிறோம்' என்றனர்.