உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.மா.கா., கூட்டணி 12ல் அறிவிப்பு

த.மா.கா., கூட்டணி 12ல் அறிவிப்பு

திருப்பூர்: ''தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து, 12ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு பின் அறிவிக்கப்படும்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரில் வாசன் நேற்று கூறியதாவது:மத்திய அளவில் பெரும்பான்மையாகவும், பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பா.ஜ., லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியமில்லை.கடந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.எம்.பி., என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை சந்தித்து, நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து, 12ம் தேதி செயற்குழு - பொதுக்குழு கூட்டத்துக்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பின், பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்லும் முன், கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழ் மாநில காங்., செயற்குழு கூட்டம், வரும் 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தல் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படும். செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு, நான்கைந்து நாட்களில் தேர்தல் அறிவிப்புகளை கட்சி வெளியிடும். பா.ஜ.,வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாகக் கூறப்படும் தகவல் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது பற்றிய கேள்விக்கு, ''எந்த துறையில் இருந்தாலும், கட்சி துவக்க ஜனநாயகத்தில் யாருக்கும் எந்த தடையும் கிடையாது. வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால், வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை