உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

ஆட்டோ கட்டணத்திற்கு புதிய செயலி; 3 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு

சென்னை : ஆட்டோக்களுக்கு கட்டணம் உள்ளிட்ட இதர சேவை பெற, புதிய மொபைல் போன் செயலியை உருவாக்குவதில், அரசு துறைகளிடையே இழுபறி நீடிக்கிறது. தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, கடந்த 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய்; காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய்; இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த கட்டணம் நிர்ணயித்து, 12 ஆண்டுகள் ஆகி விட்டன. அரசு அறிவித்தப்படி, 'டிஜிட்டல் மீட்டர்'களும் வழங்கப்படவில்லை. எரிபொருள் விலைக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டியும் அமைக்கப்படவில்லை. நிர்ணயம் அதனால், ஆட்டோக்களில் ஆரம்ப கட்டணமே, 100 ரூபாய் என வசூலிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய ஆட்டோ செயலி அறிமுகம் செய்யப்படும் என, போக்குவரத்து ஆணையரகம், மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது; இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹுசேன் கூறியதாவது: புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து, அதை புதிய செயலியில் பதிவிறக்கம் செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, போக்குவரத்து துறை அறிவிதத்து. ஆரம்பத்தில், இந்த செயலியை போக்குவரத்து துறை கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டது. பயன்பாடு பின், தொழிலாளர் நலத் துறை சார்பில் இப்பணி மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை புதிய செயலி பயன்பாட்டிற்கு வரவில்லை. இனியும் தாமதிக்காமல், ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து, புதிய செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்டோக்களுக்கான புதிய செயலியை உருவாக்கும் பணியை, தற்போது தொழிலாளர் நலத் துறை செய்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

lana
செப் 17, 2025 13:26

நான் சமீபத்தில் மும்பை சென்றேன். அங்கு ஆட்டோ taxi இல் meters பயன்பாடு உள்ளது. 75 ருபாய்க்கு taxi கிடைக்கும். மும்பையில் கட்டுப்படியாகும் விலை இங்கு ஏன் கட்டுப்படி ஆகவில்லை. கேரளா விழும் பரவாயில்லை. இங்கு மிக மோசடி


Rengaraj
செப் 17, 2025 12:27

தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்கள் தாறுமாறாக உள்ளது. முறையான கட்டணம் இல்லை. குறைந்தபட்ச கட்டணமாக நூறு ருபாய் கேட்கும் அளவுக்கு மோசமான நிலை உள்ளது. இரவு ஒன்பது மணிக்கு மேல் ரேட் டபுள். கேட்டால் ரிட்டன் சவாரி கிடைக்காது என்று ஒப்பாரி. என்னவோ இவர்கள் மட்டும் கண்முழித்து கஷ்டப்பட்டு உழைப்பதாக நினைத்து சவாரிக்கு பணம் கேட்கிறார்கள். வெயிலிலும் மழையிலும் நின்று கூலிவேலை பார்ப்பவர்களை விட தாங்கள் மோசமான நிலையில் இருப்பதாக கவலைப்படுகிறார்கள். சோம்பேறியாக சும்மாவாவது ஸ்டாண்டில் உக்காந்து இருப்போம், கம்மியான ரேட்டுக்கு வரமாட்டோம் என்று பிடிவாதம் கொண்டுள்ளார்கள். ஸ்டாண்டில் ரெண்டு பேரோ மூன்று பேரோ சேர்த்து கூட்டிப்போவதில்லை அப்படி தயாராக இருப்பவர்களையும் விரட்டிவிடுகிறார்கள். இவர்களிடம் ஒற்றுமை இல்லை. சும்மாவாவது மொபைலை நோண்டி கொண்டிருப்பார்கள். காதில் மைக் அல்லது இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒரு வாட்ஸாப்ப் குரூப் அமைத்து இருந்தால் ஒரு ஏரியா முழுவதும் எல்லோருக்கும் அவர்கள் வீட்டிலேயே வந்து பிக் பண்ணலாம். ஒரு ஏரியா ஸ்டாண்டில் வரிசையாக முறை வைத்துக்கொண்டு நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தூர சவாரிக்கு அங்கு இருக்கும் மக்களுக்கு ஷேர் கட்டணம் மூலம் நியாயமான ரேட் வசூலித்தால் எல்லோருக்கும் சவாரி கிடைக்கும். ஆனால் செய்ய மாட்டார்கள். இவர்கள் சோம்பேறித்தனத்துக்கு வேட்டுவைக்கவே ஓலா, உபேர், ராபிடோ பைக் டாக்சி போன்றவை வந்துவிட்டன. அப்படியும் இவர்கள் திருந்தப்போவதில்லை.


Muralidharan S
செப் 17, 2025 11:21

தமிழகம் எந்த சட்டதிட்டத்திற்கும் கட்டுப்படாத மாநிலம்.. அரசு மத்திய அரசுடன் ஒத்துழைத்து நல்லாட்சி நடத்தாது.. இப்படிப்பட்ட மாநிலத்தில் ஓடும் ஆட்டோக்களில் முக்கால்வாசி அரசியல்வியாதிகள் மற்றும் போலீஸ் காரர்களின் ஆட்டோக்களாகத்தான் இருக்கும்.. அண்டை மாநிலங்களில் மீட்டர் போட்டு ஓட்டும்போது இங்கு மட்டும் கட்டுப்படி ஆகாது என்று கூறி சகட்டுமேனிக்கு கட்டணம் கேட்கிறார்கள்.. கூட கொஞ்சம் பணம் போட்டால் ஒரு ஆட்டோவே வாங்கிவிடலாம்.. அந்த அளவிற்கு கட்டணக்கொள்ளை.. வர வர ஓலா rapido போன்றவைகள் கூட கூடுதல் கட்டணம் கொடுக்காவிட்டால் சவாரியை cancel செய்து விடுகிறார்கள். சமீபத்தில் கண்கூட கண்ட காட்சி - ஒரு ஆட்டோ டிரைவர் இருக்கையின் கீழ் சரக்கு பாட்டிலே வைத்துக்கொண்டு எடுத்து குடித்துக்கொண்டு இருக்கிறார்.. அப்படியே சாவாரிக்கும் ஆட்களை அழைக்கிறார்.. இவர்களது சரக்குக்கு சேர்த்துதான் கட்டண கொள்ளை. 2 கிலோமீட்டருக்கு 150 ரூபாய் எல்லாம் கேட்கிறார்கள்.. இங்கே எல்லாவற்றிலும் அரசியல் மற்றும் அரசியல் வியாதிகள்.. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி..


l.ramachandran
செப் 17, 2025 11:29

தப்பு. மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.


sankaranarayanan
செப் 17, 2025 10:58

உலகின் எட்டாவது அதிசியம் என்னவென்றால் சென்னையில் மீட்டர் பதித்த ஆட்டோக்கள் இருந்தும், அவைகள் ஓடாத மீட்டர்களாக வெறுமனே பொம்மைகளாக ஆக்கப்பட்டு மக்களை சூறையாடும் விதம்தான் இதை முழுதும் அறிந்த மாநில அரசு எந்த நடைவடிக்கைகளும் எடுக்காததுதான் அதிசயம்


Ramesh Trichy
செப் 17, 2025 10:01

இத்தனை காலம் ஆகியும் இந்த ஆட்டோ மீட்டர் பிரச்னை தீர்க்க வழி பிறக்க வழியில்லை. தமிழகத்தின் சாப கேடு போல.


Vasan
செப் 17, 2025 09:58

OLA and UBER have made TIPS option also available in booking page. It can be implemented by Govt also.


rama adhavan
செப் 17, 2025 07:37

ஆட்டோ என்றாலே கட்டணக் கொள்ளை. எல்லா மாநிலத்திலும் இதே நிலை தான். தமிழகத்தில் கொள்ளை அதிகம். வட மாநிலங்களில் சிறிய எலக்ட்ரிகல் ஆட்டோ வந்து விட்டது. பேட்டரி மூலம் ஓடுகிறது.இருவர் பயணிக்கலாம். கட்டணமும் பாதி. இது நமது மாநிலத்திற்கு எப்போது வருமோ.


raja
செப் 17, 2025 07:22

விடியல் தாரெண்ணு மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் நீட்டை விலக்குவோம், பழைய ஓய்வூதியம் தருவோம், கல்விக்கடன் தள்ளுபடி, என்பது போன்ற பல வாக்குறுதிகள் தந்து ஐந்து வருடம் ஆக போகுது செஞ்சாங்களான்னு டுமிழன் என்னைக்காவது கவலை பட்டானா...அவனுக்கு தேவை ஓசியில் குவாட்டர், கோழி பிரியாணி ஒரு ரெண்டாயிரம் பிச்சை காசு வேண்டும் அவ்ளோதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை