உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அட்டாக் பாண்டி மீது மேலும் ஒரு வழக்கு

அட்டாக் பாண்டி மீது மேலும் ஒரு வழக்கு

மதுரை : கோவை மாவட்டம் ஒட்டிப்புதூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது உறவினர் சியாம்சுந்தர். இவர் ஜெகதீசனிடம் சில தினங்களுக்கு முன் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பித்தர தாமதம் ஆனதால் மதுரை கே.கே.நகரில் உள்ள ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டினை தனக்கு பவர் எழுதி தருமாறு சியாம்சுந்தரிடம், ஜெகதீசன் மிரட்டி உள்ளார். அவ்வாறு வாங்கிய பவரை ஜெகதீசன், சக்திவேல் என்ற விவசாயத்துறை இன்ஜினியருக்கு பவரை மாற்றி எழுதி கொடுத்துள்ளார். பவரை மாற்றிய எழுதியதை திருப்பித் தருமாறு சியாம்சுந்தர், திமுக பிரமுகர் அட்டாக் பாண்டியின் துணையுடன் ஜெயகதீசனை மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அட்டாக் பாண்டி மீது மதுரை மத்திய குற்றவியல் பிரிவின் சார்பில் வழக்குப் போடப்பட்டுள்ளது. இது அட்டாக் பாண்டி மீது தொடரப்பட்டுள்ள 3வது வழக்காகும். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் உள்ள சக்திவேலின் வீட்டில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ