உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் : விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரலட்சுமி 50. இவருக்கு சொந்தமாக ஒ.கோவில்பட்டியில் நாக்பூர் சான்றிதழ் பெற்ற 60 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மதியம் 3:30 மணிக்கு பணியாளர்கள் இல்லாத போது மீதம் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் அதிக வெப்பத்தால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் இடிந்து சேதமாயின.தீ விபத்துக்குள்ளான பகுதிகளின் உள்ளே மணி மருந்து கலவை இருப்பதால் தீயணைப்புத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ