உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு

வேங்கைவயல் போல மற்றொரு சம்பவம்: திருச்சி தண்ணீர் தொட்டியில் மலம் வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் தண்ணீர் தொட்டியில், மனித மலம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தை மூடி மறைக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், உணவுப்பொருள் கழிவு என கூறப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியின், 20வது வார்டில், காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு வளையல்கார தெருவில், மாநகராட்சி சார்பில் வீட்டு உபயோகத்துக்கான, 5,000 லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுற்றியும், அதன் உயரத்துக்கு மேலும் வீடுகள் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தண்ணீர் தொட்டி மீது, பிளாஸ்டிக் பையில் வைத்து மனித மலத்தை, யாரோ வீசியுள்ளனர். வீசிய வேகத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்த மலம், தண்ணீர் தொட்டி மீதும், தண்ணீருக்குள்ளும் விழுந்துள்ளது.இதுகுறித்து அந்த வார்டு தி.மு.க., கவுன்சிலர் சங்கருக்கு தகவல் கிடைத்ததும், அவசரம், அவசரமாக மாநகராட்சி துப்புரு பணியாளர்களை வரவழைத்து, தொட்டியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொட்டியை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து விட்டார்.ஆனால், நேற்று முன்தினம் அங்கு சென்று பார்த்தவர்கள், அதை மனித மலம் என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், திருச்சி மாநகராட்சி நிர்வாகம், தொட்டியில் வீசப்பட்டது உணவுப்பொருட்களின் கழிவு தான் என்றும், மனித கழிவு இல்லை என்றும் மறுத்துள்ளது.இந்நிலையில், சம்பவம் நடந்த வார்டின் தி.மு.க., கவுன்சிலர் சங்கர், கோட்டை போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், 'மலம் வீசப்படாத நிலையில், தேவையில்லாமல் சிலர் பிரச்னையை கிளப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ganesh
பிப் 07, 2025 10:15

எவன் இதை செஞ்சானோ அவனை பிடித்து அவன் வால்வு பெர்மனெண்ட் ஆ இரும்பு கார்க் + Quick பேஸ்ட் போட்டு லாக் பண்ணிடனும். அது வெளியே வந்தா தான பிரச்னை...


MUTHU
பிப் 07, 2025 09:47

அந்த தண்ணி தொட்டியே கழிவு தொட்டி மாதிரி தான் இருக்கு.


Smbs
பிப் 07, 2025 08:41

கவுன்சிலர முட்டிய பேத்தா உண்மை வரும் அதுக்கு ஆண்மையுள்ள போலிசு வேணும் இங்க அது இல்ல


நரேந்திர பாரதி
பிப் 07, 2025 08:25

சீக்கிரம் கோல்மால்புரத்திலயும் நடக்கணும். அப்போதான் இவனுங்களுக்கு நாமெல்லாம் என்ன சொல்றோம்னு புரியும்


subramanian
பிப் 07, 2025 07:56

திமுக என்றால் ....


Kasimani Baskaran
பிப் 07, 2025 07:25

ராமசாமி கோஷ்டி ஜாதி வெறியை நீறுபூத்த நெருப்பு போல அணையாமல் பாதுகாத்து வந்தது. குறிப்பிட்ட ஜாதிகள் மீதான வெறுப்பு அவர்களது ட்ரேட் மார்க். ஆனால் உருட்டுவது மட்டும் ஜாதியை ஒழித்ததாக. இன்று அது வெவ்வேறு பரிமாணத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் வடிவில் வருகிறது. திராவிடத்தை வேரறுக்கவில்லை என்றால் புதிது புதிதாக பிரிவினை வாத உத்திகளை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.


raja
பிப் 07, 2025 07:19

எனது வாழ் நாளில் மிக மிக மோசமான தமிழகத்தின் இருண்ட காலம் எது என்றால் இந்த கேடு கெட்ட திருட்டு திராவிட மாடல் ஆட்சியின் காலம் தான்...


Vijay
பிப் 07, 2025 07:16

மூளை இல்லாதவர்கள் கூட முதல்வர் ஆகலாம் என்று நிரூபித்து காட்டியது தான் திராவிட மாடல்


நிக்கோல்தாம்சன்
பிப் 07, 2025 07:10

என்னங்க நடக்குது ?


D.Ambujavalli
பிப் 07, 2025 06:26

யாராக இருந்தாலும், குடிநீரை அசுத்தப்படுத்தி வீணாக்கியவர்கள் உயிர்த்தண்ணீர் விடக்கூட ஆளில்லாமல் கோரமான மரணத்தை அடைவார்கள். ‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே’ என்பர். காவிரி, கிருஷ்ணா என்று. போராடி வாங்கும் தண்ணீரை மக்களுக்கு உதவாமல் செய்யும் படுபாவிகளை தெய்வம் மன்னிக்காது சட்டத்தை வேண்டுமானால் அவர்கள் ஏமாற்றலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை