உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதிகை ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

பொதிகை ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: தண்டவாளத்தில் 10 கிலோ எடையுள்ள கல்லை வைத்து பொதிகை ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையான நேற்றைய தினம் செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி, பொதிகை விரைவு ரயில், சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூரின் போகநல்லூர் பகுதியில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு உஷாரான ரயிலின் லோகோ பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தி, தண்டவாளத்தில் இருந்த பெரிய கல்லை அப்புறப்படுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதிகை விரைவு ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த செப்., 26ம் தேதி இதே கடையநல்லுரில் பொதிகை விரைவு ரயில் சென்ற தண்டவாளத்தில் கல்லை வைத்த சம்பவத்தில் இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையிலும் தண்டவாளத்தில் போல்ட் மற்றும் நட் கழற்றி விடப்பட்டிருந்தது. இதனால் இரு ரயில்கள் மோதிக்கொண்டன. இதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கும் என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ., படையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

நிக்கோல்தாம்சன்
நவ 03, 2024 03:30

போஸ் கொடுக்கும் காவலரை வைத்து கொண்டு சதியை கண்டுபிடிக்க போகிறார்களா ? மர்ம நபர்கள் எதற்கு இப்போ ரயில்வே துறையை குறிவைக்கிறார்கள் ?


V Gopalan
நவ 02, 2024 16:31

Every time, Railways will tell some kind of stories. There are Railway Protection force and Govt Railway Police, both will be in the same yard. These police personnel will only take a walk along the railway platform whistling as if their duty is over. Why not Railways deploy these police personnel on the railway line to prevent accidents. Just look in the Railway Station, all the police personnel will be in the station, deploy these personnel on the railway track on shift wise instead of telling cock and bull stories after the accident.


visu
நவ 02, 2024 14:47

சிறையில் வைத்து பிரியாணி போட்டால் எப்படி தீவிரவாத எண்ணம் ஒழியும்


Dharmavaan
நவ 01, 2024 18:45

இந்த ரோஹிங்க வங்க தேச கள்ளக்குடியேறிகள் சதி வேலைகள்தாம் எல்லாமே


சாண்டில்யன்
நவ 01, 2024 18:26

நாட்டின் பாதுகாப்பு துறைக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது ரயில்வே துறை. ரயில்வே துறை மிகவும் பரந்து விரிந்த கட்டமைப்பு. மிகுந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எஞ்சின் தினசரி பராமரிப்பு, சிக்கனலிங், தண்டவாள பராமரிப்பு பணிகளையும் தனியார் கையில் ஒப்படைத்துள்ளார்கள். ரயில்வே எல்லையில் தனியார் புழங்குவது ஆபத்தானது அதன் விளைவு இப்படித்தான்.


Rpalnivelu
நவ 01, 2024 17:15

ராஜீவ் கொலை போல ஏதாவது பெரிய குற்றம் நிகழ்ந்தால் தான் மத்திய அரசு விழிக்குமா? கண்காணிப்பு/மிரட்டல் எதுவுமே இல்லையா? 370வது பிரிவு எதற்கு இருக்கிறது? ஊழல் /பிரிவினைவாதம்/ மதச்சார்பு/ போதை பொருட்களின் தொட்டில்/ தொழிற்சாலைகளில் கம்மிகளின் வெறியாட்டம் என்று தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதே தேவுடா


ManiK
நவ 01, 2024 15:51

குற்றம் செய்தவுடன் அவன் பெயர் மர்ம நபர்.. suppose போலீஸ் புடிச்சிட்டா அவன் பெயர் மனநலம் குன்றியவர்... suppose கோர்ட் தண்டிச்சால் அவன் பெயர் அப்பாவி சிறுபான்மை இளைஞர்- இதுதான் இன்றப அவலம்.


Dharmavaan
நவ 01, 2024 18:47

முஸ்லிமாக இருந்தால் மட்டுமே இந்த மூடி மறைத்தல் வேலை


Jysenn
நவ 01, 2024 15:19

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து அந்த பாறாங்கற்கள் தானாகவே உருண்டு வந்து தண்டவாளத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்.


N.Purushothaman
நவ 01, 2024 15:05

இதற்க்கு இன்னொரு காரணம் தமிழகம் போதைப்பொருளின் தாயகமாக மாறி வருவது தான் ....எங்கு பார்த்தாலும் ஒழுக்க சீர்கேடுகள் ....தனி மனித ஒழுக்கம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அதலபாதாளத்திற்கு சென்று உள்ளது .... ஏற்கனவே கூறியது தான் ....அந்தமானில் மீண்டும் சிறையை திறந்து இது போன்ற கொடூர குற்ற செயலில் ஈடுபடுவோர்களை அங்கு அடைப்பதே நலம் ....


Duruvesan
நவ 01, 2024 14:57

மனித குல எதிரி முழுவதும் மூர்கனே. விடியல் ஆட்சியில் சட்டம் மிக நன்றாக உள்ளது. அர்பன் நக்சல்,அமைதி கூட்டம் வெரூன்றி வளரும் அது தான் திராவிட மாடல். இப்போ ராவிலு மூடினு இருப்பாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை