உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு பணிக்கு அன்சுல் மிஸ்ரா மாற்றம்

மத்திய அரசு பணிக்கு அன்சுல் மிஸ்ரா மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்சுல் மிஸ்ரா, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக இருப்பவர் அன்சுல் மிஸ்ரா. இவர், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய செயலராக இருந்தபோது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக, அவர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மேல்முறையீடு செய்வதற்காக, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 30, 2025 11:59

கோர்ட் உத்தரவையே சரியாக செயல் படுத்தாத இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் எப்படி சரியாக செயல்படுவார். பாவம் நோயாளிகள். இதுவரை தான் பணியில் கவனக் குறைவாக இருந்ததற்காக மன்னிப்பு கூட கேட்காத அரசின் உயர் அதிகாரி. இந்த வழக்கை கொடுத்தவர்கள் அதிகார வர்க்கத்திடம் பெரும் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கலாம். அதனால் கூட இது போன்ற தீர்ப்பு வந்திருக்கலாம். சாமானிய மனிதன் செக் ரிட்டர்ன் கேஸ் போட்டால் ஜந்து வருடங்கள் ஆனாலும் விசாரித்து கொண்டே இருக்கும் கோர்ட்டில் இது போன்ற தீர்ப்பு வந்தது ஆச்சரியம்.


Ramaswamy SD
ஜூன் 15, 2025 14:18

நாற்பது ஆண்டுகளாக பிராட் வருபவர்களுக்கு என்ன அரசியல் செல்வாக்கு இருக்கும்?


Kasimani Baskaran
மே 30, 2025 03:42

தண்டனைக்கு பயந்து ஓடிவிட்டாரா?


சமீபத்திய செய்தி