உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலின் ஏற்பாடு ஹைஜாக்!

மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலின் ஏற்பாடு ஹைஜாக்!

சென்னை: கூட்டணியில் இருந்து கொண்டே மது ஒழிப்பு மாநாடு அறிவித்து, அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திய திருமாவளவனை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மது ஒழிப்பு மாநாடு தானே; தி.மு.க.,வும் பங்கேற்கும்' என, ஒரே போடாக போட்டு, மாநாட்டின் இலக்கையே வெற்றிகரமாக திசை திருப்பி விட்டார். மது ஒழிப்பு மாநாடு என்று முழங்கி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை, மதுவுக்கும், ஏனைய போதை பொருட்களுக்கும் எதிரான மாநாடு என சொல்ல வைத்திருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bowm7i5p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அரசுக்கு எதிரான மாநாடு என்ற தோற்றத்தை தகர்த்து, திருமாவளவனின் விமர்சனத்தை அவர், மத்திய அரசுக்கு எதிராக மடைமாற்றி விட்டிருக்கிறார்.

பற்றிய பரபரப்பு

ஒற்றை அடியில் எங்கள் மாநாட்டையே முதல்வர், 'ஹைஜாக்' செய்து விட்டார் என்று வி.சி., கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், சிறு கட்சிகள் எல்லாம் சீண்டிப் பார்க்க, தி.மு.க., ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல என்பதை திருமா இப்போது புரிந்து கொண்டிருப்பார் என, அறிவாலய நிர்வாகிகள் பெருமிதத்தில் திளைக்கின்றனர். கள்ளச் சாராயம் குடித்து நிறைய பேர் பலியான கள்ளக்குறிச்சியில், காந்தி ஜெயந்தி நாளான அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்த உடனே, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. 'பா.ஜ., மற்றும் பா.ம.க., நீங்கலாக மற்ற கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம்' என திருமாவளவன் அறிவித்ததும், அரசியல் சூடு அதிகமானது.அதில், எண்ணெய் ஊற்றுவதை போல, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை என்ற பழைய கோஷத்துக்கு திருமா புத்துயிர் அளித்தார். இதை கேட்டதும், பா.ஜ., பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவையும், குட்டையில் குதித்து வேகமாக குழப்பத் துவங்கின. திருமாவுக்கு ஆதரவாக இக்கட்சிகள் வெளியிட்ட ஒவ்வொரு கருத்தும், தி.மு.க., தலைமையை சீண்டிப் பார்க்கவே பயன்பட்டன.

எதிர்கொள்ள தயார்

திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமா, 'மதுவிலக்கு பற்றி பேசினால், மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், கூட்டணியில் விரிசல் வந்தாலும் வரலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார். ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில் எழுந்த இந்த சலசலப்பு, தி.மு.க.,வில் தாக்கம் உண்டாக்க தவறவில்லை. ஊடகர்களின் சரமாரியான கேள்விகளுக்கு உறுதியான பதில் தர அமைச்சர் முத்துசாமி போன்ற சீனியர்களே திணறினர். சரியோ, தப்போ மனதில் பட்டதை தைரியமாக பேசும் உதயநிதி கூட, 'திருமாவளவன் அ.தி.மு.க.,வை அழைத்திருப்பது அவரது விருப்பம்' என்று சொல்லி நழுவினார். இதனால், கூட்டணி மாற திருமாவளவன் தயாராகி விட்டார்; அதற்கு அச்சாரம் தான் மது ஒழிப்பு மாநாடு என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுவடைந்தது.

அதிருப்தி

வெளிநாட்டு பயணத்தை முடித்து, சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கட்சியின் பவளவிழா நேரத்தில் இப்படி ஒரு பிரச்னையா என அதிருப்தி அடைந்தார். வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சரை அழைத்து, திருமாவளவன் என்ன தான் நினைக்கிறார் என்பதை கேட்டு சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார். அமைச்சர் கேட்டு வந்து சொல்லும் வரை, கட்சியினர் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். குடும்பத்திலும், கட்சியிலும் உள்ள சீனியர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அவர்கள் சுட்டிக் காட்டிய பழைய சம்பவங்களின் அடிப்படையில், இரு திட்டங்களை இறுதி செய்தார். அதன் தொடர்ச்சியாக, மூத்த அமைச்சரின் அறிவுரைப்படி தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று காலை திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் நீடித்தது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, பொன்முடி, வி.சி., பொதுச்செயலர் ரவிகுமார், துணை பொதுச்செயலர் சிந்தனைசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதிபலிப்பு

சந்திப்புக்கு பிறகு ஊடகர்களுக்கு சேதி சொல்லும் பொறுப்பை திருமாவிடமே விட்டார் ஸ்டாலின். தன் கட்சியினர் வாய்திறக்க தேவையில்லை என்று கூறிவிட்டார். அதன்படி, திருமா பேட்டி அளித்த போது தான், ''நாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க., சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பர் என முதல்வர் தெரிவித்தார்,'' என, ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்டை அறிமுகம் செய்தார்.அதை தொடர்ந்து அவரது பேச்சும், பதில்களும் எதிர்பார்த்த பாதையிலேயே பயணித்தன. தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய சாவுகளின் விளைவாக பெண்கள் உதிர்த்த கண்ணீரின் பிரதிபலிப்பு தான் இந்த மாநாடு என, இதுவரை சொல்லிக் கொண்டிருந்தார் திருமா.தற்போது நாடு முழுமைக்கும் மது விலக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு, மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தது என்று உரத்த குரலில் பிரகடனம் செய்தார். அதை தவிர அவரது பேட்டியில், அனைவரின் கவனத்தையும் கவர்ந்த விஷயம், 'மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க.,வை நான் அழைக்கவே இல்லை' என்பது தான். பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரத்தில் இந்த திருப்பம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'காலம் காலமாக எங்கள் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வரும் விஷயம் மதுக்கடை மூடலும், மது ஒழிப்பும். 'திடீரென அந்த ஆயுதத்தை லபக்கிக் கொண்டு ஓடினார் திருமா. இப்போது, அவர் கையில் இருந்து ஸ்டாலின் பறித்துக் கொண்டார்' என்று சொல்லி மகிழ்கின்றனர். 'தி.மு.க., பங்கேற்பதால், அ.தி.மு.க., அந்த பக்கமே வராது. ஆக, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்து விட்டார் எங்கள் தலைவர்' என, குதுாகலிக்கின்றனர் தி.மு.க.,வினர்.

500 கடைகளுக்கு பூட்டு?

கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மது விலக்கு அமல்படுத்தப்படும்' என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஏட்டிக்கு போட்டியாக முதல்வர் ஜெயலலிதா, 'மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும்' என்றார். அவரே மீண்டும் முதல்வரானார். படிப்படியாக மது விலக்கு அறிவிப்பின்படி, முதல் படியாக, 500 கடைகளை மூட உத்தரவிட்டார். அவர் மறைந்ததும் முதல்வரான பழனிசாமியும், 500 கடைகளை மூட உத்தரவிட்டார். கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில் கடந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது மீண்டும் மது விலக்கு கோரிக்கை வலுவடைந்து வருவதால், மேலும், 500 கடைகளை மூட தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. எத்தனை கடைகளை மூடினாலும், மது விற்பனை பெரிதாக குறையாது என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் ஆட்சேபிக்கவில்லை. மூட வேண்டிய கடைகளை கணக்கெடுக்கும் பணியில், அதன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Matt P
செப் 23, 2024 08:02

மேலே உள்ள படத்தை பார்த்தல் மூணு பேரும் குடிச்சுப்புட்டு போதையில ஆடுவது மாதிரி தெரியுது. ..குடிச்சாலும் குடிப்பானுகளா இருக்கும்.


spr
செப் 18, 2024 15:50

வி சி க மது ஒழிப்பு மாநாடு என்பதற்குப் பதிலாக மதுக்கடைகளை ஒழிக்கும் மாநாடு என்று அறிவித்திருந்தால் இந்தப் பிரச்சினை உருவாகியிருக்காது மதுவை யார் ஒழிக்க முடியும் குடிப்பவர் தானே இனி வாங்க மாட்டேன் குடிக்க மாட்டேன் என்றாலொழிய மதுவை யாராலும் ஒழிக்க முடியாது அரசுக்கு மட்டுமல்ல வருமானம் கட்சிகளுக்கும் சாராய உற்பத்தியாளர்கள் கப்பம் கட்டியிருப்பார்கள் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." அது போலவே "குடிக்காரர்களாகப் பார்த்து குடிப்பதை நிறுத்தினால், லஞ்சம் வாங்குபவர்களாகப் பார்த்து லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இரண்டுமே ஒழியும்" அரசு எச்சரிக்கை விளம்பரம் செய்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கிறது டாஸ்மாக் அரசின் கீழ் இருக்கும்வரை அது வருமானம் தருமாறு வியாபாரம் அரசு ஒழிக்க முடியாது


Indian
செப் 18, 2024 15:43

பரோட்டா ..


Saravana Kumar
செப் 17, 2024 20:12

ஒரே ஜோக்கா போச்சி குமாரு


M Ramachandran
செப் 17, 2024 19:42

தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கும் முயற்சி


vijai
செப் 17, 2024 18:02

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய பேசுவீங்க நினைச்சா மீண்டும் சொதப்பிட்டீங்களே மத்திய அரசை மீண்டும் குற்றம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே முதல்வர் இல்லாத போது தைரியமாக பேசின நீங்கள் ரூட்ட மாத்திட்டீங்க


என்றும் இந்தியன்
செப் 17, 2024 17:22

1 திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு முதல்வரின் மனைவி சனாதன தர்ம கோவிலுக்கு செல்வார் ஆனால் அவர் மகன் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து சனாதன தர்ம ஒழிப்பு பற்றி கூக்குரல் கொடுப்பார். 2 கஞ்சா போதை மாத்திரை நடமாட்டம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்வார்கள் ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இதன் நடமாட்டம் ரூ 30 கோடியிலிருந்து ரூ 35,000 கோடி உயரத்திற்கு சென்றுள்ளது. 3 இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக உளறுவார்கள் ஆனால் மக்களை நாசம் எசெய்யும் ஆட்சியாக இருக்கும் இவர்கள் ஆட்சி.


Rengaraj
செப் 17, 2024 16:54

தமிழக மக்களை முட்டாள்கள் என்று தி.மு.க வில் சேர்ந்துஇருக்கும் அனைத்து கட்சிகளும் நினைத்த்துவிட்டார்கள் . தனித்தனியா ஒவ்வொரு கட்சியா இந்த விஷயத்தில் மக்கள் முன்னால் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும். மக்கள் கேள்விகேட்டால் அதற்கு பதில் சொல்லத்தயாராக இருப்பார்களா ? கூட்டணி கட்சியினர் வோட்டுக்கேட்டு வரும்போது மக்கள் முதலில் கேட்கவேண்டிய கேள்வி ஜெயித்தவுடன் மக்கள் பிரச்சினைக்கு நீங்கள் சட்டசபையிலோ பாராளுமன்றத்திலோ ஆளும்கட்சியை நோக்கி அழுத்தம் கொடுத்து பேசுவீர்களா பேசமாட்டீர்களா என்பதல்ல பிரச்சினைக்கு மாநாடு போடுவீர்களா இல்லையா என்றுதான் கேட்கவேண்டும் போலிருக்கிறது இவர்கள் நடவடிக்கை. நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு தி.மு.க , மற்றும் அண்ணா தி.மு.க கூட்டணி கட்சிகள் என்ன கிழித்துவிட்டார்கள் ? மக்களும் இவர்கள் நடத்தும் நாடகங்களை பார்த்து பார்த்து நொந்துபோய்விட்டார்கள். பிரச்சினைக்குரிய மதுவே இவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஊக்கமருந்தாக தொண்டர்களுக்கு எல்லாக்காலத்திலும் பயன்படுகிறது. அதை எந்த கட்சியாவது விட்டுக்கொடுப்பார்களா ? அடிவருடிகளை போன்று செயலாற்றிவிட்டு தற்போது மாநாடு , போடறேன் என்று கிளம்பிவிட்டார்கள்.? திருமா பண்ணுவதை எல்லாம் பார்க்கும்போது , உண்ணாவிரதம் இருக்கேன் என்று சொல்லிவிட்டு ஹோட்டல் முதலாளியை பக்கத்தில் வைத்துக்கொண்டுவிட்டதை போன்று இருக்கிறது. இதில் உண்ணாவிரத பந்தலுக்கு முதல் ஆளாக ஹோட்டல் முதலாளியே தனது ஆட்களோடு வந்துவிட்டதுதான் ஹைலைட்


RAMAKRISHNAN NATESAN
செப் 17, 2024 16:03

கோவில் கோவிலாக போகும் துணைவியாரை சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தலைமை தாங்கச் சொல்லுவார் .....


குமரன்
செப் 17, 2024 15:47

இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவார்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் திமுக மதுவிலக்கு வேண்டும் என்று மத்திய அரசிடமே ஒருவேளை கேட்குமோ இதேபோல் மம்தாவும் யாருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று அந்த மாநில மக்களுக்குமே புரியவில்லை


சமீபத்திய செய்தி