மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago
சென்னை : தமிழக அரசின் நிதியுதவியுடன், புனிதப்பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் நாடுகளுக்கு, புனிதப்பயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. இப்புனிதப் பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மதத் தொடர்புடைய பிற புனித தலங்களைஉள்ளடக்கியது.இத்திட்டத்தின் கீழ், புனிதப்பயணம் செல்லும் பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் வழங்கப்படும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அங்கேயே வழங்கலாம்என, தமிழக அரசுதெரிவித்துள்ளது.
1 hour(s) ago