மேலும் செய்திகள்
பார்லிமென்ட், சட்டசபைக்கு ஒரே தேர்தல்!
19-Sep-2024
சென்னை:தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், 'பூத்' கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தி.மு.க.,வில் தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கு முன், லோக்சபா தேர்தலை ஒட்டி, ஓராண்டுக்கு முன்பே தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்த்தல், பெயர்களை சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். நகரம், பகுதி, வார்டு, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகளை சந்தித்து, கட்சி பணிகள் சரிவர நடக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.அதில் உள்ள நிறை, குறை குறித்த தகவல்களையும், எந்தெந்த அணியில் நிர்வாகிகள் இல்லை என்ற விபரத்தையும், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. அது, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் வெற்றி பெற உதவியாக அமைந்தது.அதே பாணியில், வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தற்போது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.முதல்வரின் கொளத்துார் தொகுதிக்கு, தி.மு.க., சட்டத்துறை தலைவர் விடுதலை; துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிக்கு ஐ.டி., அணி மாநில துணைச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சி.எச்.சேகர்; மயிலாப்பூர் தொகுதிக்கு ஐ.டி., அணி ஆலோசகர் கோவி.லெனின் என, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
19-Sep-2024