மேலும் செய்திகள்
நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி
29-Oct-2024
சென்னை:குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குனராக, வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.குற்ற வழக்கு தொடர்வு துறையின் இயக்குனர் சித்ராதேவி, விருப்ப ஓய்வில் சென்றதால், அந்த இடம் காலியாக இருந்தது. தற்காலிக பொறுப்பு இயக்குனராக, மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.நீதிமன்ற பணி மிகவும் பாதிக்கப்படுவதால், நிரந்தர இயக்குனரை நியமித்து, தன்னை விடுவிக்க வேண்டும் என, அரசிடம் கடிதம் வாயிலாக ஜின்னா கோரினார். அதை ஏற்று, புதிய இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.கிருஷ்ணராஜா, மதுரையை சேர்ந்தவர். மதுரை சட்டக் கல்லுாரியில் சட்டம் பயின்று, 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்; குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி.தமிழக போக்குவரத்துக் கழக வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், சென்னை மாநகர கூடுதல் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர்.
29-Oct-2024