உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்

தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்

சென்னை: தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க, மாவட்ட கல்வி அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 'நாட்டில் 5 வயது முதல், 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும்' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பள்ளிகளில் இருந்து தொலைவில் வசிப்போர், அடிக்கடி இடம் மாறு வோர், நிரந்தர வசிப்பிடம் இல்லாதோர், தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில், காலை, மதியம் சத்துணவு, இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. பீடி, பட்டாசு தொழிலாளர்கள், பட்டிய லினத்தவர், சிறுபான்மை யினத்தவரின் பெண் குழந்தைகளுக்கு, மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளில், ஆண்டுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து, இடைநின்ற மாணவ - மாணவியரை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ