உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தக்கார் நியமனம் ரத்து

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தக்கார் நியமனம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவண்ணாமலை கோவில் தக்கார் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தக்காராக ஜீவானந்தம் என்பவரை ஹிந்து சமய அறநிலையத்துறை நியமனம் செய்து உத்தரவிட்டது.இதனை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது: பொது மக்கள், பக்தர்கள் தரப்பில் ஜீவானந்தத்தை தக்காராக நியமிக்க ஆட்சேபனை தெரிவித்தும் அவரே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிர்வாகத்திற்கு முதலில் அறங்காவலர்கள் குழு அமைக்க வேண்டும். பிறகு, குழுவில் இருந்து தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்ற விதி ஜீவானந்தம் நியமனத்தில் மீறப்பட்டு உள்ளது. அரசியல் பின்னணி உடைய 5 பேர் அறங்காவலர் குழுவில் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம். கோவில் அறக்கட்டளை சொத்து வாடகைதாரராக இருக்கும் ஜீவானந்தம் ஆதாயமடையும் வாய்ப்பு உள்ளதால், அவரை நீக்க வேண்டும். பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வாதத்தை ஏற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தக்காராக ஜீவானந்தம் நியமனம் செய்த ஹிந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

NATARAJAN K
மே 04, 2025 12:32

இந்த ஜீவானந்தம் யார் என்பது பற்றி ஏன் எதுவுமே எழுதவில்லை?


konanki
மே 01, 2025 14:15

10 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் இல்லை. அரசு தேடுதல் கமிட்டி கூட போடவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தில் 2 வருடமாக துணை வேந்தர் இல்லை. மாணவர்கள் டிகிரி சர்டிபிகேட் பெற முடியாமல் தவிப்பு. ஆனால் கோவில் சொத்தை ஆட்டைய போட திருட்டு டாஸ்மாக் டூபாக்கூர் தீயசகதி யின் சதி.


konanki
மே 01, 2025 14:11

சென்னை தேனாம்பேட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் நியமனமும் இதே போல் சட்ட விரோதம். ஆனால் அந்த சட்ட விரோத தக்காரை கொண்டே சென்னை பழைய மாம்பலம் அயோத்தியா மண்டபம் ராம் சமாஜை அரஜாகமாக ஆட்டைய போட முற்பட்ட திருட்டு டாஸ்மாக் டூபாக்கூர் தீயசகதி அரஜாக துறை யின் முயற்சி யை அந்த ஊர் பக்தர்கள் கோர்ட் மூலம் தடுத்தி நிறுத்தினார்கள்.


konanki
மே 01, 2025 14:05

களவாணி யை நியமனம் செய்த திருட்டு டாஸ்மாக் டூபாக்கூர் திராவிஷ தீய சகதி. களவாணியை களவாணியே காமுறுவர்


c.mohanraj raj
மே 01, 2025 00:17

அவனுக்கு வசதியான திருடன் தானே தேர்ந்தெடுப்பான்


rama adhavan
ஏப் 30, 2025 17:53

அடி மேல் அடி. அம்மி 26இல் நகர்ந்து விடும் போல் உள்ளதே.


rama adhavan
ஏப் 30, 2025 17:52

நேற்று 50 இலச்சம் அபராதம். கடந்த வாரம் 500+ சப் இன்ஸ்பெக்டர் தேர்வு ரத்து. தானே துணை வேந்தர் என்ற ஆணையில் சிக்கல். இன்று தக்கார் நியமனம் அவுட். 1926இல் அம்மி நகர்ந்து விடுமோ?


bharathi
ஏப் 30, 2025 17:37

EVV INFLUENCE


V Venkatachalam
ஏப் 30, 2025 16:29

என்ன இது திராவிடியா மாடலுக்கு சோதனை மேல் சோதனையா இருக்கு. கோர்ட் இந்த பக்கம் தடை போட்டா நாங்க அந்த பக்கம் போயி அந்த பொந்துல உட்கார்ந்துகிட்டு திராவிடியா மாடல் அடுத்த கொள்ளையை ரெடி பண்ணுவோம்.


Sundaran
ஏப் 30, 2025 16:20

எத்தனை முறை அடித்தாலும் புத்தி வரவில்லை. 2026 இல் காணாமல் போய் விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை