மேலும் செய்திகள்
ஆசிய தரவரிசை பட்டியல்: அண்ணா பல்கலைக்கு 204வது இடம்
1 hour(s) ago | 1
ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார்
3 hour(s) ago
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
4 hour(s) ago
சென்னை : தகுதியில்லாத செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதால், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலின் போது, அரசு மருத்துவமனைகளில், தற்காலிக அடிப்படையில், 2,366 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மேல்முறையீடு
இவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என, 2022 டிசம்பர், 30ல் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 977 பேர் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மனுதாரர்களை, அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமாக பணி அமர்த்த உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு பிறப்பித்த உத்தரவு:காலியிடங்களில் முதல் கட்டமாக, 977 பேரை நியமிப்பதாகவும், அதன்பின், உருவாகும் காலியிடங்களில் மீதியுள்ள, 1,389 பேரை நியமிப்பதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதம்
சீனியாரிட்டி, தகுதி, ஜாதி சுழற்சி அடிப்படையில், காலியிடங்களில் நியமிக்க, 977 பேருக்கும் முன்னுரிமை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள் செயல்பட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், நமக்கு நாமே செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் எஸ்.செந்தில்நாதன் தாக்கல் செய்த மனுவில், 'தமிழக அரசு முதல் கட்டமாக, 977 பேரை நியமிப்பதாக உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது. அதைமீறி, தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், தகுதியில்லாத, 963 பேரிடம் பணம் பெற்று, குறுக்கு வழியில் பணியில் அமர்த்தியுள்ளனர். 'இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாகவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.
1 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago