மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, ஒருநாள் உணவுச் செலவிற்கு 50 ரூபாய் மட்டுமே தி.மு.க., அரசு கொடுக்கிறது. ஆனால், மோப்ப நாய்க்கு 200 ரூபாய் கொடுக்கிறது. மோப்ப நாயை விட, மாணவர்கள் கேவலமானவர்கள் என தி.மு.க., அரசு நினைக்கிறதா? உணவு தொகையை அதிகரிக்காவிட்டால், பா.ஜ., போராட்டம் நடத்தும். கடந்த மூன்று ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, மத்திய பா.ஜ., அரசு வழங்கிய 7,000 கோடி ரூபாயை தி.மு.க., அரசு திருப்பி அனுப்பி உள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இரண்டு ஆண்டுக்கு முன் வரை, தமிழகத்தில் 42 லட்சம் பயனாளிகள் இருந்தனர். அவர்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பர் என அஞ்சி, 25 லட்சம் பேரை, தி.மு.க., அரசு நீக்கி விட்டது. கருணாநிதி ஆட்சி காலத்தில், விசாரணை ஆணையம் அமைத்தால், எந்தவிதமாக அறிக்கை தர வேண்டும் என்பதை பேட்டியாக கூறி, ஆணையத்தையும் அதே கருத்தை சொல்ல வைப்பார். தற்போது, கரூர் சம்பவத்திலும், ஆணையம் விசாரிக்கும்போதே, செந்தில் பாலாஜி பேட்டி கொடுக்கிறார். எனினும், கரூர் விவகாரத்தில் உண்மை வெளிவரும். - வெங்கடேசன், துணை தலைவர், தமிழக பா.ஜ.,