உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குப்பை லாரியில் உயிர் காக்கும் மருந்துகளா

குப்பை லாரியில் உயிர் காக்கும் மருந்துகளா

குப்பை லாரியில் உயிர் காக்கும் மருந்துகளா

சென்னை கொடுங்கையூரில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்துகளை, குப்பை லாரியில் எடுத்து சென்றுள்ளனர். இந்த அவமானகரமான செயல், மக்களின் நல்வாழ்வை, தி.மு.க., அரசு முழுதுமாக புறக்கணிப்பதை காட்டுகிறது. தமிழகத்தில் தயாரித்த, நச்சு இருமல் மருந்தால், 21 குழந்தைகள், மத்திய பிரதேச மாநிலத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது, தமிழக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில், பல ஆண்டுகளாக தொடரும் புறக்கணிப்பு மற்றும் அலட்சியத்தின் விளைவு. தமிழக சுகாதாரத் துறை, அடிப்படை தரங்களை உறுதி செய்வதில், தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. -அண்ணாமலை முன்னாள் தலைவர் தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி