உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:பஸ் ஓட்டுநர், நடத்துநர் மது போதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறியும் சோதனை, போக்குவரத்து கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுதும், 20,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர் கவனத்துடன், பஸ்களை பாதுகாப்பாக இயக்கி வருகின்றனர். பயணியரின் நன்மதிப்பையும் பெற்று வருகின்றனர்.ஒரு சிலர் மது போதையில் பணிக்கு வர முயற்சிப்பதால், போக்குவரத்து கழகங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சில ஊழியர்கள் மது போதையில் இருப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.இது, பயணியர் பாதுகாப்பு பிரச்னை என்பதால், தமிழகம் முழுதும் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு, 1.79 கோடி ரூபாய் செலவில், ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.இந்தக் கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓட்டுநர் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காகித வடிவில் பெற முடியும்.இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மது குடித்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M Ramachandran
ஏப் 06, 2025 16:12

இது ஞ்யாய மல்ல. எப்படி டாஸ்மாக் வரும்படி அது எப்படி பெருகும்


karupanasamy
ஏப் 06, 2025 15:52

குடிக்கு பரிசோதனையா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 06, 2025 13:21

அரசு பஸ் ஓட்டுநர்களிடம் போதை பரிசோதனை செய்யும் நேரத்தை முன்கூட்டியே அறிவித்து விட்டால் எல்லா ஓட்டுநர்களும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள் .


Ramesh Sargam
ஏப் 06, 2025 12:55

போதையில் இருக்கிறாரா? தமிழக காவல்துறையில் பணிபுரிபவர்களையும் இப்படி தினமும் பரிசோதனை செய்யவேண்டும். பல காவலர்கள் குடித்துவிட்டுத்தான் பணிக்கே செல்கிறார்கள்.


Jay
ஏப் 06, 2025 12:50

இதே போன்று போதையில் வருகின்றனரா என பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என எல்லா இடத்திலும் சோதனைகள் நடத்தலாம். டாஸ்மார்க் ஆறு ஓடாத இடம் இல்லை ஆகவே அனைத்து இடத்திலும் சோதனையை நடத்துவது காலத்தின் கட்டாயம்.


rama adhavan
ஏப் 06, 2025 09:58

போதையில் உள்ளதை அறிய உபயோகிக்கும் பிரேத் அனாலிசர் கருவியை ஓட்டுநர், நடத்துனர் இருக்கைக்கு நடுவில் வைத்து ஆன்லைன்னில் கண்காணிக்க வேண்டும். இது நடுவழியில் குடிப்பதை அறிந்து கட்டுப்படுத்த உதவும்.


கிஜன்
ஏப் 06, 2025 08:21

போதையில் இல்லையென்றால் மெமோ கொடுப்பார்கள் ...


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஏப் 06, 2025 08:51

தமிழ்நாடே டாஸ்மாக் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது இந்த லெட்சணத்தில் இது ஒண்ணுதான் கொறச்சல்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 06, 2025 08:03

இதே போல பயணிகள் இடம் நாகரீகமாக பேசவும் நடந்து கொள்ளவும் கண்டக்டர் டிரைவர்களுக்கு சொல்லி கொடுத்தால் நல்லது. தற்போது பயணிகள் அனைவரும் கண்டக்டரை எதிரிகள் போல் பார்ப்பதும் கண்டக்டர்கள் பயணிகள் அணைவரும் கீழ் தரமானவர்கள் என்பது போல பார்ப்பதும் தவிர்க்கப்படும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் பேருந்துகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி தர வேண்டும். பொதுமக்களுக்கு செய்தி விளம்பர துறை மூலம் ஊடகங்கள் வாயிலாக பேருந்துகளில் நடந்து கொள்ளும் விதம் பற்றி அறிவுரை கூற வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 06, 2025 06:55

அரசே சாராயம் விற்பதால் அவப்பெயர் வரப்போவது இல்லை - ஆனால் அவர் அரசு பேருந்தை இயக்கம் பொழுது மட்டும் அவப்பெயர் வந்துவிடுகிறதாம்... என்ன ஒரு வன்மம்... குடிகாரர்கள் தங்களுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்று முடிவு செய்தால் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடிகள் கடன் வாங்கித்தான் தமிழக அரசு திவாலாகாமல் தப்பிக்க முடியும்.


Padmasridharan
ஏப் 06, 2025 05:26

இந்த காக்கிச் சட்டைகளுக்கு பண்ண மாதிரி, காக்கி சட்டை போட்ட காவலர்களுக்கு இதை தைரியமா பண்ண முடியுமா. . இவங்க கடற்கரையில் வரும் மக்களை clear பண்ணிட்டு அவங்கதான் அந்த இடத்தை use பண்ணிக்கிறாங்க ரோந்து பணியில


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை