வாசகர்கள் கருத்துகள் ( 2 )
போயஸ் கார்டனில் கேமரா இல்லாத வீடு இல்லை. பொய் சொன்னால் பிடிபடுவீர்கள்.
ஆயுதங்களுடன் வந்தவர்களை பிடித்து காவல் துறை இடம் ஒப்படைக்க முடியவில்லையா? கொடி கட்டிய காரின் நெ. தெரியவில்லையா? எல்லாம் கட்சிக்காக ஸ்டண்ட்!
சென்னை : த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவர் அர்ஜுனா உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர், நடிகர் விஜயின் த.வெ.க., கட்சியில், தேர்தல் பிரசார மேலாண்மை செயலராக உள்ளர். இவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, சென்னை தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்துாரி ரங்கன் சாலையில், ஆதவ் அர்ஜுனா அலுவலகம் உள்ளது. கடந்த, 10ம் தேதி காலை, மதியம், மாலை என மூன்று வேளை, சந்தேகப்படும்படி ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் நோட்டமிட்டு சென்றுள்ளனர். தி.மு.க., கொடி கட்டிய கார் ஒன்றும் வந்து சென்றது. இதனால், ஆதவ் அர்ஜுனா உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.