மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
ஊட்டி : அவலாஞ்சியில் அமைக்கப்பட்ட ஆர்கிட் பண்ணை, போதிய பராமரிப்பு இல்லாமல் அழியும் நிலையில் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள, ஆர்கிட் மலர்களைப் பாதுகாக்க, ஊட்டி அருகே அவலாஞ்சி பகுதியில், வனத்துறை சார்பில் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. வனங்களில் காணப்படும் ஆர்கிட் சேகரிக்கப்பட்டு, இன விருத்தி செய்து வளர்த்து வந்தனர். இங்கு, 30 ரகங்கள் உள்ளன. முன்பு, தெற்கு வனக்கோட்ட கட்டுப்பாட்டில் இருந்த இந்த பண்ணை, தற்போது முக்கூர்த்தி தேசிய பூங்காவின் கீழ், இயங்கி வருகிறது. பண்ணை அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல், அழியும் நிலையில் உள்ளது. முதுமலை காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''அவலாஞ்சியில் உள்ள பண்ணையை மேம்படுத்த, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், ஒரு லட்ச ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது; நிதி கிடைத்தவுடன் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படும்,'' என்றார்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21