உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜி.எஸ்.டி., வழக்குகளில் கைது தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

ஜி.எஸ்.டி., வழக்குகளில் கைது தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: 'எல்லா ஜி.எஸ்.டி., வழக்குகளிலும் கைது நடவடிக்கை தேவையற்றது. குற்றம் தொடர்பாக நம்பகமான ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரிகளின் குறிப்பிட்ட பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என 281 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ், பீலா திரிவேதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நேற்று நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யின் ஒவ்வொரு வழக்கிலும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. விசாரணையை முடிக்க கைது செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறவில்லை. சட்டத்தின் நோக்கம் அது கிடையாது.நம்பகமான ஆதாரங்கள் மற்றும் உறுதியான ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை இருக்க வேண்டும். சட்டம் சுதந்திரத்தை உயர்ந்த பீடத்தில் வைத்துள்ளது. அதை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது. ஜி.எஸ்.டி., மற்றும் சுங்க வரிகள் சட்டப்பிரிவில் உள்ள கைதுக்கான காரணங்கள் மற்றும் குற்றம் நடந்திருக்கக் கூடும் என நம்பும் காரணங்கள் குறித்து நீதிமன்றம் ஆராயும்.ஜி.எஸ்.டி., அதிகாரிகள் மிக கடுமையாக நடந்த சம்பவங்களும் உள்ளன, அதே போல் வரி செலுத்துவோர் மோசடியில் ஈடுபட்ட வழக்குகளும் உள்ளன. தீர்ப்பு வழங்கும் போது அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

R.RAMACHANDRAN
மே 17, 2024 08:30

இந்த நாட்டில் குற்றவாளிகளுக்கு எல்லா சுதந்திரமும் ஆனால் நேர்மையானவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது அவர்கள் குற்றவாளிகளுடன் ஒத்து போக வேண்டும் நீதி மன்றங்கள் சொல்கின்றன


Syed ghouse basha
மே 16, 2024 17:46

இதையெல்லாம் பார்க்கும்போது தற்ப்போது தற்காலிகமாக நீதிமன்றங்களில் சில உயிர்ப்போடு இருக்கிது என்பதை உணர முடிகிறது


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 16, 2024 17:28

செக் ரிட்டர்ன் கேன்களில் வங்கி மேலாளர் கொடுக்கும் செக் ரிட்டர்ன் ஆனதிற்கான ஆவணம் தான் முதலும் முடிவும் ஆன ஆதாரம் பின்னர் ஏன் மாண்புமிகு கோர்ட்டுகள் வழக்குகளை வருடக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்


M S RAGHUNATHAN
மே 16, 2024 12:28

உச்ச மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகள் வழக்கு நடக்கும் போது தெரிவிக்கும் கருத்துகளை பொது வெளியில் மீடியாக்கள் வெளி இடக் கூடாது என்று ஆணை இடவேண்டும் தீர்ப்பில் குறிப்பிட்டால் மட்டுமே அந்த கருத்துக் களை பிரசுரிக்கலாம் என்று ஆணை இடவேண்டும்


M S RAGHUNATHAN
மே 16, 2024 12:24

வரித்துறை அதிகாரிகள் தான் கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு எடுக்க வேண்டும் எந்த உயர் அதிகாரியும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உத்தரவு போடமாட்டார்கள் அதுவும் கைது செய்வதற்கான ஆணை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அதிகாரி தான் முடிவெடுப்பார் அலுவலக அதிகாரங்களில் உச்ச நீதி மன்றம் ஆலோசனை குடிப்பது தவறு வேண்டும் என்றால் கைது செய்யும் அதிகாரத்தை உச்ச நீதி மன்றம் எடுத்துக் கொண்டு நாட்டின் நிர்வாகத்தை கவனிக்கலாம்


Sampath Kumar
மே 16, 2024 11:25

கைது தேவை இல்லை கையூட்டு கொடு


S.Bala
மே 16, 2024 11:08

வர வர நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வித்தியாசமாக உள்ளது ஜி எஸ் டி வழக்கு மட்டுமல்ல ஊழல் வழக்கில் கூட வித்தியாசமான தீர்ப்புகள் வாழ்க ஜனநாயகம்


venugopal s
மே 16, 2024 11:07

பாஜகவினரின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சி அல்ல, உச்ச நீதிமன்றம் தான் போல் உள்ளது!


Nagarajan D
மே 16, 2024 13:46

பிஜேபி யின் எதிரி அல்ல பொதுமக்களுக்கு எதிரியாக தான் நீதிமன்றங்கள் ulladhu


sridhar
மே 16, 2024 10:33

இன்னும் ஊழல் வழக்குகளில் கைது தேவை இல்லை, வயசானால் கைது தேவை இல்லை , ஹிந்து விரோதமா பேசுனா கைது தேவை இல்லை … பேசாம சிறை எல்லாம் இடிச்சி வீடு கட்டிடுங்க


rao
மே 16, 2024 09:19

Days are not far, when SC will give directions not to arrest robbers and murders,is it not an economic crime if GST are not paid to govt when realised from customer


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை