உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு ஆணவம் நல்லதல்ல: கவர்னர் ரவி

முதல்வருக்கு ஆணவம் நல்லதல்ல: கவர்னர் ரவி

சென்னை: '' முதல்வருக்கு ஆணவம் நல்லது அல்ல ,'' என தமிழக கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார்.இந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 6ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் உரையை வாசிக்காமல் அவை துவங்கிய 3 நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c4ohabwk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ' தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபையும் தொடர்ந்து அவமதிக்கும் கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?' என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!' எனக்கூறியிருந்தார்.இந்நிலையில் ராஜ்பவன் எக்ஸ் தள கணக்கில் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் 'அபத்தமானது' மற்றும் 'சிறுபிள்ளைத்தனமானது' என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Alagusundram Kulasekaran
ஜன 13, 2025 10:13

பொருங்கள் ஆளுநரே வரிசையாக தமிழக அமைச்சர்கள் கம்பி என்ன காத்திருக்கும் போது கவலை எதற்கு


Ravi
ஜன 13, 2025 09:29

தேசியகீத்தை நான் மிகுந்த மரியாதை கொண்டவன். ஒரு காலத்தில் திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது நான் கடைசி வரை நின்று இருப்பேன். ஆனால் அது இப்போது இசைப்பதில்லை. நமது கவர்னர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டின் மற்ற அலுவல்களை விட்டு வெளியேறி விட்டார். தமிழ் நாட்டின் முக்கியம் கருதி அவர் தனது விருப்பதை புறம் தள்ளிவிட்டு மற்ற வேலைகளை முடித்துவிட்டு விட்டு ஒரு கண்டனத்தை தெரிவித்து விட்டு சென்று இருக்கலாம். கடைசியல் தமிழ் நாடு ஒரு இரு தலை கொள்ளி எறும்பு போல இருக்கிறது. மிகுந்த வேதனை அளிக்கிறது.


Arul Narayanan
ஜன 13, 2025 09:18

ஆளுநரின் ஆணவம் முதல்வரின் ஆணவத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல.


venugopal s
ஜன 13, 2025 05:53

அதைச் சொல்பவர் நேர்மையான, நடுநிலையான, எளிமையான, தான் வகிக்கும் பதவிக்கு உண்மையாக, அரசியல் கட்சிகளை விட மாநில மக்கள் நலனே முக்கியமானது என்று கருதும், செயல்படும் ஆளுநராக இருக்க வேண்டும்!


AMLA ASOKAN
ஜன 12, 2025 23:24

சட்டசபை என்பதே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பு. அதன் நோக்கமே அரசின் திட்டங்கள் குறித்து அங்கு விவாதித்து மக்கள் நல்வாழ்வுக்கான மசோதாக்கள் நிறைவேற்றுவது தான். அது தான் ஆளுநர் உரையில் கூறப்பற்றிருக்கும் அதை தான் சம்பிராயதமாக எல்லா மாநில ஆளுநரும் படிக்க வேண்டும். சபையின் தொடக்கத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மரபு தான் இவ்வாண்டும் கடை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நமது ஆளுநர் ரவி தான் விரும்பியபடி அந்த சடங்கு நடைபெறவில்லை என கோபித்துக் கொண்டு 3 நிமிடத்தில் வெளியேறி விட்டார். இது ஒரு தனி நபர் சுயவிருப்பம் தான். இந்த விவகாரம் அடங்கி முடிந்த பின் ரோஷம் பொங்கி திடீரென ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். இது ஆணவப் பிரச்சினை அல்ல , அரசியல் சட்ட பிரச்சினை.


Alagusundram Kulasekaran
ஜன 13, 2025 10:21

போகி என்றால் பழையன கழித்தலும் புதியன புகுந்தலும் ஆளுநர் என்ன கேட்டார் பாகிஸ்தான் தேசீய கீதம் பாட சொன்னாரா அதனை மரபு மரபு படிதான் எல்லாம் நடக்கிறதா அணைகின்ற விளக்கு பிரகாசமாக எரியும் பின்னர் யாரிடம் பதவிப்பிரமாணம் செய்வார்


பேசும் தமிழன்
ஜன 12, 2025 21:39

அப்போ கூடிய விரைவில்... இந்த விடியாத அரசு வீட்டுக்கு போய் விடுமா ???


sankaranarayanan
ஜன 12, 2025 21:19

இதை இந்த அவமதிப்பை நாட்டின் நலம் ஒற்றுமை பெருமை மரியாதை இவைகளை முற்றிலும் மீறப்பட்டதை கருதி ஏன் உச்ச நீதி மன்றமே முன் வந்து அத்துமீறி நடந்த அரசை கலைக்கூடாது இதையும் மக்கள் எடுத்துசொல்லவேண்டுமா


ramesh
ஜன 12, 2025 21:17

ஆணவம் யாருக்கு என்பது அறிக்கை விட்டவருக்கே தெரியும் .70 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து தான் தொடங்கும் போது தமிழக சட்டசபையில் இடம் பெற்றுவருகிறது. இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது . இது வரையிலும் இருந்த ஆளுநர்கள் யாரும் இது குறித்து பேசவில்லை .அப்படி இருக்க தற்போதைய ஆளுநர் அது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி 10 நிமிடத்துக்குள் வெளிநடப்பு செய்தால் அதை பார்த்தவர்களுக்கு பத்திரிகையில் படித்தவருக்கு உண்மை நிலை என்ன என்பதை நன்கு அறிவார்கள்


Ramesh Sargam
ஜன 12, 2025 20:04

ஆணவத்தால் அழிந்த பலரை பார்த்து முதல்வர் திருந்தவேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 12, 2025 19:15

2026 ஆம் ஆண்டு இதே கவர்னர், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தான் போகிறார். அப்போதும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப் படும். எழுந்து நிற்கத்தான் போகிறார். பதவியேற்பு நிகழ்ச்சியில் இருந்து எல்லாம் எழுந்து ஓட முடியாது. நீதிமன்றம் பலமுறை கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தும் திருந்தவில்லை.


Dharmavaan
ஜன 12, 2025 19:55

நீதி மன்றம் கண்டிக்கப்பட வேண்டும் இந்த வரம்பு மீறும் செயலுக்காக


veera
ஜன 12, 2025 21:13

கனவு காண உமக்கு உரிமையுண்டு வைகுண்டம்....ஆனால் அதுக்கு 200 ரூபாய் தரமாட்டங்க...ஓகே வா.


பேசும் தமிழன்
ஜன 12, 2025 21:44

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை உங்களை விட ஆளுநர் அவர்கள் தெளிவாக பாடுகிறார்.... அதனால் வேறு ஏதாவது சொல்லி உருட்ட பாருங்கள் !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை