உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி

வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி

சென்னை : பள்ளி மாணவ - மாணவியரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநில போட்டிகளை, வரும் 3, 4ம் தேதிகளில் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 1 -- 5 வகுப்புகளுக்கு, 4ம் தேதி கோவையிலும், 6 - 8 வகுப்புகளுக்கு, அதே நாளில் திருப்பூரிலும் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கான போட்டிகள், 3, 4ம் தேதிகளில் ஈரோட்டிலும், 11, 12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லிலும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை