உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிடம் குறித்து முதல்வரை விளக்கம் சொல்ல சொல்லுங்கள்: கேட்கிறார் சீமான்

திராவிடம் குறித்து முதல்வரை விளக்கம் சொல்ல சொல்லுங்கள்: கேட்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: திராவிடம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: அதிகாரத்தை, 40 பார்லிமென்ட் உறுப்பினர்களை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் பிரச்னை குறித்து கடிதம் எழுதுகிறாராம். ஆப்பரேஷன் சிந்தூர் போரை ஆதரித்து பேரணி சென்ற ஸ்டாலின் காவேரி நீர் வேண்டி, ஒரு பெரிய பேரணி நடத்தி பெற்றுத் தரலாமே? முதலில் திராவிடம் என்றால் என்ன என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லட்டும். ஏற்கனவே அடிச்ச அடில இங்க நடக்கிற கல்யாணம் தான் திராவிடம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி கொண்டு இருக்கிறார். நான் சொல்கிறேன். திராவிடம் என்றால் தமிழர் அல்லாதோர் வசதியாகவும் , பாதுகாப்பாகவும் ஆள்வதற்கும் , வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டது திராவிடம். இதனை மறுப்பவர் யார்? எதிர்ப்பவர் யார்? தமிழக மக்கள் அரசியல் தெளிவு பெற்று ஓட்டளிக்காதவரை திராவிட கதைகளை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். தமிழகத்தில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

தமிழ்வேள்
அக் 18, 2025 20:38

தங்கள் குல இழிவை தவிர்க்க, ரெண்டு பயல்கள்,ஒட்டு மொத்த தமிழகத்தையும் இழிவு சாக்கடையில் தள்ளிய தந்திரமே திராவிடம்....


SUBBU,MADURAI
அக் 18, 2025 19:45

திராலிடம் என்றால் என்ன என்பதைப் பற்றி நம் முதல்வரிடம் போய் விளக்கம் கேட்டால் பாவம் அவர் என்ன செய்வார்? அவருக்கு யாராவது நாலு வரியில் துண்டுச் சீட்டை எழுதிக் கொடுத்தால் அதையும் தப்பும் தவறுமாக வாசிப்பார் அவரை சொல்லி குற்றமில்லை அவரது படிப்பறிவு அம்புட்டுதான்!


raja
அக் 18, 2025 19:33

இது வந்து விக்ரம் நடித்த சேது படத்தில் வரும் சீயானுக்கு விளக்கம் கேட்பது போல இருக்கு .எல்லாரையும் ஏமாத்த கண்டுப்பிடித்தது தான் இந்த திருட்டு திராவிடம் .போய் வேறு வேலை இருந்தா பாருங்க தமிழர்களே எவனாவது திராவிடம் திராவிடன்னு இல்லாத ஒன்றை சொல்லிக்கிட்டு வந்தார்கள் என்றால் காலில் போட்டு இருப்பதை கொண்டு அடியுங்கள் ...


ராஜாராம்,நத்தம்
அக் 18, 2025 19:13

இவருடைய பேச்சையெல்லாம் இவருடைய திரள்நிதி தம்பிகளே மதிப்பதில்லை இந்த தேர்தலோடு இவன் செல்லாக் காசாகி விடுவார்..


ganesan
அக் 18, 2025 19:11

இளிச்சவாயன் தமிழனை ஆழ்வதற்கு தெலுங்கன், மலையாளி , கன்னடன் சொல்லும் வார்த்தை தான் திராவிடம்


raja
அக் 18, 2025 19:06

பூ, இத ஒரு சின்ன தமிழ் குழந்தை கூட ஸ்டாலின் அப்பா சொல்லும் திராவிடம் என்பது பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மடையர்களை நம்ப வைப்பது, வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது , உடன் பிறப்புகளை கொண்டு சங்கிலி போன்ற தங்க நகைகளை உருக்கி திருடுவது , பதவிக்காக கொலை செய்வது, கொள்ளைபடிப்பது, அவர்களின் உதவியுடன் போதை பொருள்கள், தங்கம் கஞ்சா முதலியவற்றை கடத்தி விற்பது , அவைகளை சுட்டிக்காட்டுபவர்களை குண்டாசில் உள்ளே தூக்கி போடுவது..அவ்வ்ளோதான் .. சோ சிம்பிள் ....


sengalipuram
அக் 18, 2025 18:43

3% விழுக்காடு இருந்த முன்னேறிய சமுதாயத்தை வசை பாடி மீதமுள்ள 97% விழுக்காடு மக்களை திசை திருப்ப உதவிய வார்த்தை திராவிடம் . 70 வருடங்களாக மிகவும் உபயோகமாக உள்ள திராவிடத்தை சைமன் கொச்சை படுத்த பார்க்கிறார் . திராவிடம், ப்ராஹ்மண எதிர்ப்பு , ஹிந்தி எதிர்ப்பு ஆகியவை எங்கள் ஆயுதம் . இவைகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டது . இப்படிக்கு திராவிட அடிமை .


சோழநாடன்
அக் 18, 2025 18:33

திராவிடம் என்பது முதலில் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறித்தது. பின்பு இந்தியாவிற்குள் வந்த ஆதிக்கம் செய்த ஆரியர்களின் எதிர்ப்புச் சொல்லாக மாறியது. தற்போது திராவிடம் என்பது சாதி,மத ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவம் என்று பொருள்படும்படி ஓர் இயங்கியல் சொல். விஜய் அரசியல் தற்குறி என்றால், சீமான் கொள்கை தற்குறி. திராவிடம் குறித்து நல்லா குழப்பிக் கொண்டிருந்தால் தேர்தல் நேரத்தில் ப வைட்டமின் அதிகம் கிடைக்கும் என்பது திராவிடம் என்ற சொல்லின் நற்பயன்.


எஸ் எஸ்
அக் 18, 2025 19:39

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் என்பது வெள்ளைகாரன் மற்றும் ராமசாமி உருட்டு.... ஆரியன் திராவிடன் என்று பாகுபாடு ஏதும் இல்லை என்பதும் அனைத்து இந்தியர்களின் டி என் ஏ வும் ஒன்றுதான் என்பதும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டவை.


கல்யாணராமன்
அக் 18, 2025 18:29

இதுதான் திராவிடம் என்று ஒரு முடிவான விளக்கம் எந்த ஒரு திமுக தலைவரும் சொன்னது இல்லை. ஒவ்வொருவரும் அந்தந்த நேரத்திற்கு ஏற்ப ஒரு பதிலை சொல்லி சமாளிக்கிறார்கள். டீக்கடையில் கட்சி தொண்டர் அருகில் தலைவர் அமர்ந்து டீ குடிக்கும் சம்பவம் நிகழும் போது எல்லோரும் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்களே இதுதான் திராவிடம் என்று ஒரு பதிலை எடுத்து விடுவார்கள்.


Field Marshal
அக் 18, 2025 17:08

பெட்டி வெய்ட்டா தரமாட்டேங்கறாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை