உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 நாள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது

5 நாள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த மாதம் 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், மறுநாள், வேளாண் பட்ஜெட்டும் தாக்கலானது. அவற்றின் மீது, கடந்த 17ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விவாதம் நடந்தது. துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த மாதம் 24ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினம், ஒவ்வொரு துறை வாரியாக விவாதம் நடக்கிறது. கடந்த 10ம் தேதி மகாவீரர் ஜெயந்தியையொட்டி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்து தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால், 10ம் தேதி முதல் நேற்று வரை, சட்டசபை கூட்டம் நடக்கவில்லை.ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின், சட்ட சபை மீண்டும் இன்று கூடுகிறது. இன்று, செய்தி மற்றும் விளம்பரம்; எழுதுபொருள் மற்றும் அச்சு; தமிழ் வளர்ச்சி துறை, மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பதில் அளித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.பெண்களையும், சைவ, வைணவ சமயங்களையும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை நீக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பை சபையில் வெளியிட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஏப் 15, 2025 10:53

மாநில சுயாட்சி 60 ஆண்டு பழைய பல்லவி. கீறல் விழுந்து தேய்ந்த ரெகார்ட்.


பாரத புதல்வன்~ தமிழக குன்றியம்
ஏப் 15, 2025 08:43

இது சட்ட சபை அல்ல..... சண்டியர் சபை....


GMM
ஏப் 15, 2025 05:35

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பை சபையில் வெளியிட உள்ளார். நீர், நில மனித வளம் மிகுந்த எந்த மாநிலமும் சுயாட்சி சிந்திப்பது இல்லை. தேச பாதுகாப்பு தேசிய நெடு்சாலை, இரயில், விமானம், துறைமுகம்.. போன்ற மாநில உயிர் நாடிகள் மத்திய அரசு கட்டுபாட்டில். தலைக்கு மேல் மாநில கடன். இலங்கை, வங்கதேச நிலை தமிழகத்தில் உருவாகும். டாஸ்மாக் சிக்கலில் திமுக தலைமை.? மிரட்டல் தீர்மானம். 50 ஆண்டுகளுக்கு மேல் புறக்கணிப்பில் உள்ள கோவை, தென் மாவட்டங்கள் எதிர்க்கும். மெட்ராஸ் ஆந்திரா அல்லது பாண்டியின் பகுதி ஆகும். தஞ்சை தனி யூனியன் ஆக விரும்பும். தன்னை காப்பாற்ற திமுக மக்களை துன்புறுத்த விரும்புகிறது. தப்பிக்க தனி நாடு தீர்மானம் தான் வழி. ? அரசியல் சாசனம் மாநில சுயாட்சியை தடுத்து வகுக்கப்பட்டது. சாசனத்திற்கு எதிரான தீர்மானம். உயர் நீதிமன்றம் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்ய முடியும்.


Mani . V
ஏப் 15, 2025 05:28

ஒரு அம்மன் சல்லிக்கும் பிரயோசனமில்லை. வழக்கம் போல் "செயல்படாத அப்பா வாழ்க உபயோகமில்லாத இளவரசர் வாழ்க" கோஷம்தான் கேட்கும்.


Kasimani Baskaran
ஏப் 15, 2025 03:44

தனி நாடு கூட அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை