உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ

செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ

திருநெல்வேலி: சாத்தூரில் நடந்த ம.தி.மு.க., கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு துரை வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.சாத்துாரில் ம.தி.மு.க., கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச்சென்ற செய்தியாளர்கள், காலி நாற்காலிகளை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைகோ, அவர்களை தாக்கும்படி தொண்டர்களுக்கு மேடையில் உத்தரவிட்டார். இதையடுத்து பாய்ந்து சென்ற ம.தி.மு.க., தொண்டர்கள், படம் பிடித்த செய்தியாளர்களை சரமாரியாக தாக்கி, கேமராக்களை பறித்துக் கொண்டனர்.இது தொடர்பாக, செய்தியாளர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட செய்தியாளர்களிடம் வைகோ நேரில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து துரை வைகோ வெளியிட்ட அறிக்கை; செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ என்பது நாடறிந்த உண்மை.நேற்று மாலையில் நெல்லை மண்டல ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர். வைகோ இரவு 8 மணிக்கு பேசத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர். சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும் தலைவர் பேசத் தொடங்கினார். அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த வைகோ , 'மாலை நான்கு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐந்து மணி நேரமாக உள்ளே அமர்ந்திருக்கின்றனர். மின்சாரம் தடைப்பட்டதும் சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்க போய் படம் எடுப்பீர்களா? 'என்று கேட்டார். தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று தலைவர் அறிவுறுத்திய போது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன் பின்னர் நடந்தவை விரும்பத் தகாதது ஆகும்.https://www.youtube.com/embed/m373OepF7jgம.தி.மு.க.,வின் 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை. கட்சி அலுவலகத்தில் ஒரு ஊடகவியலாளர், தன் நேர்மையான பொது வாழ்க்கை குறித்து அவதூறான கேள்வி எழுப்பிய போதும் நேர்காணலை நிறுத்திவிட்டு அவரை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்தவர் வைகோ .செய்தியாளர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தோழமை உணர்வோடு தான் பழகி வருகிறேன். எந்த கேள்வி எழுப்பினாலும் இன்முகம் காட்டியே பதில் கூறுகின்றேன். ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் ம.தி.மு.க.,வின் கருத்து ஆகும்.சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும் கட்சியின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜூலை 10, 2025 18:55

நிஜமாவே வைகோ, கைப்புள்ள ஆகிவிட்டார். வயதாக வயதாக, மனிதன் குழந்தையாகி விடுவான்.வைகோ மதிமுக குண்டர்களை விட்டு செய்தியாளர்களை தாக்கி, அவர்களது கேமராவில் உள்ள பிலிம் மை கைப்பற்ற சொல்லி மைக்கில் கதறியது ரொம்ப நகைச்சுவையாக இருந்தது. வடிவேலு நடிக்காத குறையை தீர்த்து வைத்த வைகோவிற்கு நன்றி.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 19:46

ஐயா தாமரை, எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும். குண்டர்களை விட்டு செய்தியாளர்களை தாக்கி, அவர்களது கேமராவில் உள்ள பிலிம் மை கைப்பற்ற சொல்லி மைக்கில் கதறியதில் கைப்பற்றப்பட்ட பிலிம் ரோல்கள் எத்தனை ?எந்த கேமிராமேன் பிலிம் ரோல் கேமிராவை கொண்டுவந்திருந்தார் ?


Rajarajan
ஜூலை 10, 2025 16:41

யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கும், ஒரு தைரியம் வேண்டும். அது இவரிடம் உள்ளது. பாராட்டுக்கள். விடுங்க பாஸ். எதோ காதுகுத்து விழா போல, உள்ள போனா கடா வெட்டி இருப்பாங்கன்னு, விருந்து சாப்பிடுவோம்னு, சில பொதுஜனம் உள்ள வந்துட்டாங்க. அது இல்லன்னு தெரிஞ்சதும் வெளியேறிட்டாங்க. இது ஒரு குத்தமா ?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 10, 2025 14:44

மதிமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், மதிமுகவில் செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டால் வைகோவும் அதிர்ந்து போவார் ..மூர்ச்சையாவார் .. .தமிழ்நாடே அதிர்ச்சியிலிருந்து மீளாது.. ஐந்துபேர் ஒன்றுக்கூடி பேசிக்கொண்டிருந்தது ஒரு குற்றமா? அதை மதிமுக கூட்டமென்று புரளிகிளப்பி விடலாமா .. அதைபோய் நிருபர்கள் படம் எடுக்கலாமா? எனவேதான் மதிமுகவின்ஒரே தொண்டரான வைகோவின் கார் டிரைவர் தாக்கியிருக்கிறார் .. இந்த அக்கப்போரை வேறு எங்கும் கேட்கமுடியாது


R.P.Anand
ஜூலை 10, 2025 14:36

ஃபோட்டோ எடுக்கட்டுமே அதே ஓட்டு தான் விழ போகுது.


saravan
ஜூலை 10, 2025 14:14

உங்க ஐயா தான மன்னிப்பு கேட்கணும்


Rajagiri Apparswamy
ஜூலை 10, 2025 13:00

திமுகவின் அடிமையாக மதிமுக மாறிவிட்டது. ரவுடித்தனம் அன்றி வேறு என்ன எதிர்பார்க்க முடியும்


Ramkumar Ramanathan
ஜூலை 10, 2025 12:53

vaiko lost his moral authority to run the party, he should desolve the party


T.குருநாதன், மதுரை
ஜூலை 10, 2025 12:51

இப்படி கட்சி நடத்துவதற்கு பேசாமல் திமுகவுடன் இணைத்து விடலாம்


SRIRAM
ஜூலை 10, 2025 12:51

கதை, திரைக்கதை வசனம் பாடல், டைரக்ஷன் …துறை வைகோ சொல்லி கொடுத்தது தீய மு க


Anand
ஜூலை 10, 2025 12:50

வருத்தம் தெரிவித்ததோடு நிற்காமல் அதற்கு காரணமான வைகோவை கட்சியை விட்டு நீக்கிவிடுவார், அப்படி நீக்க முடியாவிட்டால் அக்கட்சியில் இருந்து இவரே வெளியேறிவிடுவார் என நம்புவோம்.... நமக்கு நீதி, நேர்மை, நியாயம் தான் முக்கியம்..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2025 17:37

வைகோ வை கட்சியை விட்டு நீக்க நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். எங்களுக்கு கிடைக்கும் நகைச்சுவை காட்சிகளை அவரே தருகிறார். வேண்டுமென்றால் அவரை விட்டு கட்சியை நீக்கி விடவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை