உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: '' என்னை துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போகியுள்ளனர். தற்போது பழைய உத்தியை கையில் எடுத்துள்ளார்கள்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தி.மு.க., தொடர்ந்து ஆட்சியில் இருக்கிற ஒரு அரசியல் இயக்கம். அக்கட்சிக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற தேவை இல்லை. அந்தளவு தி.மு.க., பலவீனமாக இல்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தி.மு.க.,வை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால் அதை தி.மு.க., எதிர்கொள்ளும். ஆனால், தி.மு.க.,வும் நாமும் பேசுகிற அரசியல் கோட்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதை வேடிக்கை பார்க்க முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bovsg3fq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என்னிடம் கூடுதலாகத் தொகுதி தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம். தி.மு.க., அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைகாட்டினார்கள். விடுதலை சிறுத்தை இது போன்ற அரசியல் நகர்வுகளுக்கு இடமளித்தது இல்லை. அசைத்து பார்த்தார்கள் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஊசலாட்டத்தில் வி.சி.க., இல்லை. வளைந்துக்கொடுப்பதால் முறித்து விடமுடியும் என நினைத்தார்கள். வளைந்து கொடுப்பது எல்லாம் முறிந்து விடாது எனப் புரிந்துக்கொண்டார்கள். திருமாவளவன் மோர் பிளக்சபில் பட் மோர் ஸ்ட்ராங். என்னை யாரும் முறித்து, உடைத்து முடியாது. என்னை ஒரு துருப்பு சீட்டாக வைத்து தி.மு.க., கூட்டணியை உடைத்து விடலாம் எனக் கணக்கு போட்டு தோற்று போயுள்ளனர். தற்போது பழைய உத்தியை கையில் எடுத்துள்ளார்கள். அ.தி.மு.க., கூட்டணியை அமித்ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அ.தி.மு.க.,வை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும். 2026ம் ஆண்டு தேர்தல் நமக்கு ஒரு சோதனை. திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பதை விட, சமூக நீதி அரசியலை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சி. அ.தி.மு.க., கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் எனப் பா.ஜ., கூற நினைக்கிறது. ஒரு பெரிய திராவிட இயக்கமான அ.தி.மு.க.,வை அழித்து விட்டால், அடுத்த பெரிய சக்தியான தி.மு.க.,வை வீழ்த்தி விட முடியும் என்பது அவர்கள் கணக்கு. இவ்வாறு திருமாவளவன் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Selvarajan Gopalakrishnan
ஏப் 14, 2025 23:34

யாருடா நீ? அவவ்ளவு சீன் எல்லாம் உனக்கு இல்ல,


கனிஷ்கா ஜோதிட நிலையம் கனிஷ்கா திருமண தகவல் மையம்
ஏப் 14, 2025 22:58

வல்லக்கோட்டை அதிமுக பிஜேபி


manian Rama
ஏப் 14, 2025 17:33

மிக மிக பெரிய வாக்கு வங்கி உள்ள இயக்கம்.. தலை கொண்டு வா என்றால்.. தலையை வெட்டி எடுத்து வருவார்கள்.. வெறிபிடித்த கூட்டத்தை அடக்கி இருக்கிறார்.. தேர்தல் பணிகளில்.. தேர்தல் கூட்டங்களில் அறிவிப்பு செய்தாலே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறது


SUBRAMANIAN ARUMUGAM
ஏப் 14, 2025 15:41

திருமாவை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.அவர் வைரம் பாய்ந்த தேக்கு மரம்,பாஜக அதிமுக வை வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு காண்கிறார்கள் இருக்கிற நாலு சீட்டும் போய் வடக்கயே ஓடப்போகிறார்கள்,எடப்பாடி எதிர்க்கட்சி தகுதியையும் இழந்து தலையில் துண்டை போட்டுக் கொண்டு மூலையில் உட்காரப் போகிறார்.


Ethiraj
ஏப் 14, 2025 14:02

You are happy with few seats for your friends. 2026 you will become mister be loyal to family


naranam
ஏப் 14, 2025 14:01

நீ வெறும் ...சீட்டு தான்.


Masilamani Srinivasan
ஏப் 14, 2025 10:19

நீ ஓரூ துரு பிடித்த சீட்டு


Loganathan Balakrishnan
ஏப் 14, 2025 10:15

உன்னையும் நம்பி ஒரு சிலர் ஓட்டு போடுவன சொல்லணும்


NACHI
ஏப் 14, 2025 04:22

இந்த ரணகலத்திலும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு கேக்குது....கொய்யால


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 04:02

துருபிடிச்ச தகரடப்பா வெல்லாம் பேசும் என எவன் மதிக்கிறான் ?. தலீவரே உங்களுக்கு உடைஞ்ச பிளாஸ்டிக் குர்ஸி ரெடி. உங்களுக்கு அதுவே ஜாஸ்தி என மாடல் அரசு கீழ்மட்ட தொழிலாளி சொல்கிறார். சரியாத்தான் சொல்கிறார். உங்களால் அட்டைவன படுத்தப்பட்ட பிற ஜாதியினருக்கு ஒன்றும் கிழிக்கவில்லை என உண்மை அறிந்து அந்த ஆட்கள் உங்களின் மேல் காண்டாக உள்ளனர் என்பது ஊர் அறிந்த உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை