வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மூதாட்டி என்று தெரிந்தே பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் ....போலிஸே சொல்லிவிட்டது ஒப்புக்கொள்ள வேண்டியது தான்....!!!
திண்டிவனம்: திண்டிவனத்தில் பலாத்கார முயற்சியில் பாதிக்கப்பட்ட மூதாட்டி திடீரென உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி. இவர் கடந்த 6 ம் தேதி வீட்டில் தனியாக படுத்திருந்தார். அதிகாலை 2:00 மணியளவில், அய்யந்தோப்பு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் பத்மநாபன், 29; என்பவர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். மூதாட்டி சத்தம் கேட்டு, வெளியில் படுத்திருந்த அவரது மகன் ஓடிவந்தார். அதற்குள் அவர் தப்பி சென்றார். இதுகுறித்து திண்டிவனம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பத்மநாபனை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மூதாட்டி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டிலிருந்த மூதாட்டி நேற்று மாலை உயிரிழந்தார். திண்டிவனம் டவுன் போலீசார், மூதாட்டியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி என்று தெரிந்தே பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்தவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் ....போலிஸே சொல்லிவிட்டது ஒப்புக்கொள்ள வேண்டியது தான்....!!!