உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எட்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

பி.எட்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்

சென்னை : பி.எட்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் 13 மையங்களில் வினியோகிக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் உட்பட ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் இன்று முதல், வரும் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சமாக ஓ.சி., பிரிவினர் 50 சதவீதம், பி.சி., பிரிவினர் 45 சதவீதம், எம்.பி.சி., மற்றும் சீர்மரபினர் பிரிவினர் 43 சதவீதம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.

மேலும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதமும், சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 90 சதவீதமும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற ஏற்கனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதை எதிர்த்து, தனியார் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கில், 'தனியார் கல்லூரிகள் விரும்பினால், அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை அளிக்கலாம். ஆனால், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களைப் பெற முடியாது' என்று, ஏற்கனவே சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

எனினும், பல தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீடுக்கு இடங்களை அளிக்க முன்வருவதாக, கவுன்சிலிங் பணிகளை மேற்கொள்ளும் வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எத்தனை தனியார் கல்லூரிகள், எத்தனை இடங்களை அரசுக்கு வழங்குகின்றன என்ற விவரம், கவுன்சிலிங்கின் போது தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ