உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.3 கோடிக்கு பங்களா கட்டும் பி.ஏ.,

ரூ.3 கோடிக்கு பங்களா கட்டும் பி.ஏ.,

''கிட்டத்தட்ட, 3 கோடி ரூபாய்ல வீடு கட்டுறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.''அட, 3 கோடி ரூபாய்ல கட்டுனா அது வீடில்லை... பங்களா ஓய்...'' என, சிரித்தார் குப்பண்ணா.''அதுவும் சரி தான்... 'பால்' மனம் கொண்ட அமைச்சர் ஒருத்தர் அடிக்கடி சர்ச்சையில சிக்கியதால, அவரை வீட்டுக்கு அனுப்பிட்டு, இன்னொருத்தரிடம் அந்த துறையை குடுத்தாங்களே... பழைய அமைச்சரிடம் பி.ஏ.,வா இருந்தவரே, புதியவரிடமும் அதே பதவியில ஒட்டிக்கிட்டாருங்க...''கிட்டத்தட்ட மூணு வருஷமா துறையில ஊறிட்டதால, எப்படி எப்படி, 'கட்டிங்' வசூலிக்கிறது என்பது இவருக்கு ரொம்பவே அத்துப்படி... இப்ப, இந்த பி.ஏ., தன் சொந்த ஊரான, நெல்லை, வண்ணாரப்பேட்டையில, 3 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டிட்டு இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''என் அப்பனே, செந்திலாண்டவா...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி