மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
விருதுநகர் : சமச்சீர் புத்தகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் தேவை குறித்து பட்டியல் அனுப்பும் படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் நடக்கவுள்ளதால் புத்தகங்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் புத்தகங்களை ஆக., 15 ல் மாணவர்களுக்கு வினியோகித்து 16 ல் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு புத்தகங்களுடன் வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது பள்ளிகளில் சமச்சீர் புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். புத்தகங்கள் அச்சகங்களில் அச்சிடப்பட்டு அங்கிருந்து அரசு குடோன்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி மாவட்டங்களில் உள்ள ஸ்டாக் பாய்ண்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. தற்போது ஸ்டாக் பாயிண்டுகளிலும், அரசு குடோன்களிலும் உள்ள புத்தகங்கள் முழுமையாக பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. சில வகுப்புகளுக்கு சில புத்தகங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக் நடக்கவுள்ளதால் புத்தகங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அந்தந்த மாவட்டங்களில் சப்ளை செய்யப்பட்ட புத்தகங்கள் எவ்வளவு. இன்னும் தேவைப்படும் புத்தகங்கள் எவ்வளவு என பட்டியல் அனுப்பும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை ஓரிரு நாளில் சரியாகிவிடும்,'' என்றார்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21