உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் பதிவாளர் அலுவலகங்களில் உறவினர்களுக்கு தடை

சார் பதிவாளர் அலுவலகங்களில் உறவினர்களுக்கு தடை

சென்னை:சார் பதிவாளர் அலுவலகங்களில், ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டாலும், லஞ்ச புகார்கள் தொடர்கின்றன. வெளியாட்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, மாவட்ட பதிவாளர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சார் பதிவாளரின் உறவினர்கள், நண்பர்கள் என்ற அடிப்படையில், தரகர்கள் நடமாடுவது தெரியவந்தது.இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் பிறப்பித்துள்ள உத்தரவு:சார் பதிவாளர் அலுவலகங்களில், துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடக்கூடாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், சார் பதிவாளர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என யாரையும், தன்னிச்சையாக எந்த பணியிலும்ஈடுபடுத்தக்கூடாது.மாவட்ட பதிவாளர்கள் திடீர் ஆய்வுகள் வாயிலாக, இதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை