உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த தடை!

அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த தடை!

சென்னை, ஆக. 2-- தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு, அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம், கடந்த மாதம் 15ம் தேதி துவக்கப்பட்டது. இதில், நகர்ப்புறங்களில் 13 துறைகளைச் சேர்ந்த, 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த, 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கு, 54.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விளம்பரம் உள்ளிட்டவற்றில், 'ஸ்டாலின்' என்ற பெயரை, தமிழக அரசு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வ வழிமுறைகள், அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறியதற்காக, தி.மு.க., மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இனியன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசு திட்டங்களுக்கு, வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைப்பதையும் அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், கொடி, சின்னத்தையும், அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதும், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷனின் உத்தரவுகளுக்கு விரோதமானது. தமிழக அரசு புதிதாக துவங்க உள்ள, ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில், அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வர் படத்தையோ, கட்சியின் கொள்கை, சிந்தாந்த தலைவர்களின் புகைப்படத்தையோ, தி.மு.க.,வின் கொடி, சின்னம் போன்றவற்றையோ பயன்படுத்தக் கூடாது. அதேநேரத்தில், அரசு நலத் திட்டம் தொடங்குவதற்கோ அல்லது செயல்படுத்துவதற்கோ எதிராக, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அத்துடன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., அளித்த புகாரை, தேர்தல் கமிஷன் விசாரிக்க, இந்த வழக்கு தடையாக இருக்காது. வழக்கு விசாரணை வரும், 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாற்றம் செய்யக்கோரி அரசு மனு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், விளக்கம் கேட்டும், தமிழக அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அமர்வில், நேற்று பிற்பகலில் முறையீடு செய்தனர். 'விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தால், வரும் 4ம் தேதி விசாரிக்கப்படும்' என, தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனு விபரம்: மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை என்று கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப் படங்களை பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாநிலம் முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும், இன்று துவங்க உள்ள, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், ஜூன் மாதமே அறிவிக்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. திட்டம் தொடர்பாக, துண்டு பிரசுரங்கள் மற்றும் ஆவணங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு மாநிலம் முழுதும் வினியோகிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, புதிதாக ஆவ ணங்களை அச்சிட, மேலும் பல வாரமாகும் என்பதால், திட்டம் ஸ்தம்பித்து விடும். ஜூன் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு திடீரென்று தடை விதித்தால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, ஏற்கனவே அறிவித்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், உயர் நீதிமன்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்போது துவங்கப்படும் திட்டங்களை, அதே பெயரில் அமல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 09, 2025 22:01

உச்சநீதி மன்ற மேல்முறையீட்டில் வந்த தீர்ப்பு. போதை சண்முகத்துக்கு ௹10 லட்சம் அபராதம், ஹைகோர்ட் தீர்ப்பு செல்லாது. ஹைகோர்ட்டு நீதிபதிகளுக்கும் அபராதம் போட்டிருக்கலாம்?


Kjp
ஆக 02, 2025 21:00

ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கி உருப்படியாக செலவழித்து இருந்தால் வீடு வீடாக சென்று ஓட்டு பிச்சை கேட்க வேண்டிய தேவை இல்லை. முதல்வர் படத்தையும் முதல்வர் அப்பா மகன்.படத்தையும் போட்டு விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. உளவுத்துறை எச்சரிக்கை செய்த பிறகு காலம் கடந்த ஞானோதயம் பிறந்து இருக்கிறது.


NRS SAMY.
ஆக 02, 2025 20:42

படிக்க படிக்க உன் வண்டவாளம் தெரிகிறது


Anantharaman Srinivasan
ஆக 02, 2025 19:05

மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் மத்திய மாநில அரசு திட்டங்களுக்கு ஆட்சியிலிருப்பபவர்கள் பெயர் மட்டுமல்ல புகைப்படமும்கூட போடக்கூடாது. தெரு போஸ்டர்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் தொலைகாட்சிகளிலும் இவங்க மூஞ்சிய பார்த்து பார்த்து அலுத்து விட்டது. .


ஆரூர் ரங்
ஆக 02, 2025 18:53

பெரும்பாலான அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதிகள் இல்லை. அதற்கு விடியல் ஏற்பாடு செய்ய வேண்டும். விருப்பப்படும் பட்சத்தில் அவற்றுக்கும் தன் பெயரையே வைக்கலாம்.


xyzabc
ஆக 02, 2025 18:46

இன்பநிதி திட்டம் எப்போ ரிலீஸ் ஆகும்?


ஆரூர் ரங்
ஆக 02, 2025 21:58

அரசு ஸ்மூத்தாக நடக்கணுமா வேண்டாமா?


pmsamy
ஆக 02, 2025 17:31

அதிமுக,ஜெயலலிதா காலகட்டத்தில் அம்மா என்ற பெயர் வைத்து எத்தனை திட்டங்கள் செய்தீர்கள்.நீங்க பேசறது அநியாயமா இல்ல


ديفيد رافائيل
ஆக 02, 2025 20:31

அம்மா என்ற வார்த்தை பொதுவானது


Natarajan Ramanathan
ஆக 02, 2025 23:21

நீங்களும் அப்பா அல்லது தாத்தா என்று பெயர் வைக்கலாமே


Tamilan
ஆக 02, 2025 17:25

சர்வாதிகார மோடியின் பெயரை மட்டுமே போடவேண்டும் என்று கூற மறந்துவிட்டார்களோ ?


மனிதன்
ஆக 02, 2025 17:14

நல்ல விஷயம்தான்... அரசாங்க திட்டங்கள் "தமிழக அரசின் திட்டம்" "இந்திய அரசின் திட்டம்" என்றுதான் இருக்கவேண்டும் மக்களின் வரிப்பணத்தில் சுய விளம்பரம் செய்வது கூடாது.. பெயர் மட்டுமல்ல புகைப்படமும்கூட போடக்கூடாது... இது ஸ்டாலினுக்கு மட்டுமல்ல மோடி, எடப்பாடிபோல் யார் ஆட்சியிலிருந்தாலும் இதை தவிர்க்கவேண்டும்...


Kulandai kannan
ஆக 02, 2025 17:03

சிரிப்பு சிஎம்


சமீபத்திய செய்தி