உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை, ஆக. 10--- 'பா.ம.க., தலைவராக, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே தொடர்வார்' என, அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், ஓராண்டுக்கு பிறகே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இப்போதுள்ள நிர்வாகிகளே நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு மேடையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்காக போடப்பட்ட நாற்காலி, கடைசி வரை காலியாகவே இருந்தது. ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில், மாமல்லபுரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் செயல்பாடுகள் மீது, பா.ம.க., முழு நம்பிக்கை கொண்டுள்ளது கட்சியின் அமைப்பு விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் 2026ல், சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும். அதனால், உட்கட்சி தேர்தல் மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் அதுவரை, பா.ம.க., தலைவராக அன்புமணி, பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தொடர்வர். இதற்கு, பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் வெறுக்கப்படும் கொடுங்கோல் தி.மு.க., அரசை, வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த பா.ம.க., உறுதியேற்கிறது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்தால், பா.ம.க., சார்பில் மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெயர் கெட்டு விடும் பொதுக் குழுவில் அன்புமணி பேசியதாவது: ராமதாஸ் ஒரு தேசிய தலைவர்; சமூக சீர்திருத்தவாதி. எங்களுக்கு அரசியலையும், சமூக நீதியையும் கற்றுக் கொடுத்தவர். ஆனால், இப்போது அவரால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது. சில நேரங்களில் சுவாமிக்கு கொஞ்சம் கோபம் வந்து விடும். அப்போது திருவிழா நடத்துவோம்; காவடி எடுப்போம். இதில், பூசாரி தான் இடையில் பிரச்னை செய்வார். ராமதாசை சுற்றியுள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள், குள்ளநரி கூட்டம், பொய்களை சொல்லி சொல்லி அவரை ஏமாற்றுகின்றனர். நான் பிடிவாதக்காரன் அல்ல; உறுதியானவன். யாராவது வந்து பேசி சமாதானப்படுத்தினால் சமாதானமாகி விடுவேன். பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது; சொல்லவும் போவதில்லை. ஆனால், செய்ய வேண்டியதை செய்வேன். ராமதாசிடம், 40 முறை பேசி விட்டேன்; நேற்று கூட பேசினேன். நான் பேசினால், காலையில் சரி என்பார்; பின், பூசாரிகள் சொன்ன பின், அடுத்த நாள் இல்லை என்பார். ராமதாசின் மானம், மரியாதை தான் நமக்கு முக்கியம் . மாம்பழம் சின்னம் ஒருதலைபட்சமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தால், ராமதாஸ் பெயர் கெட்டு விடும். நிர்வாகிகள் நியமனத்தில் இருவரும் இணைந்து கையெழுத்து போடுவோம் என்பதை, 15 நாட்களுக்கு முன் ஒப்புக் கொண்டார். அப்புறம், 'நான் மட்டுமே நியமிப்பேன்' என்று கூறி விட்டார். அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது; நிறுவனர் தான் நிரந்தரம். பொதுக்குழு முடிவு செய்பவர் தான் தலைவர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கிஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விரைவில் கூட்டணி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது; யார் வர வேண்டும் என, பா.ம.க.,வுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. வன்னியர்கள், பட்டியலின மக்களின் துரோகி தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரைவில் அறிவிப்போம். கட்சி நிர்வாகிகளின் விருப்பப் படியே கூட்டணி அமையும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,

'உருவத்தில் இல்லை உள்ளத்தில் இருக்கிறார்'

பொதுக் குழுவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கவில்லை. ஆனாலும், அவருக்காக நாற்காலி போடப்பட்டிருந்தது. அது கடைசி வரை காலியாக வைக்கப்பட்டு இருந்தது. இதை குறிப்பிட்டு பேசிய அன்புமணி, ''ராமதாஸ் தான் நம் குல தெய்வம். இந்த பொதுக் குழுவில், உருவத்தில் அவர் இல்லாவிட்டாலும், உள்ளத்தில் இருக்கிறார். அவருக்கு பொதுக் குழுவில் நிரந்தர நாற்காலி இருக்கிறது. அவர் எப் போது வேண்டுமானாலும் வரலாம்; வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்றார். பொதுக் குழுவில் 3,000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' ராமதாஸ் விரக்தி

'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' என, அன்புமணி கூட்டிய பொதுக்குழு பற்றி, ராமதாஸ் ஒரே வரியில் பதில் கூறினார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வரும் 17ல் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக அன்புமணி நேற்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்.இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து விட்டு வந்த பொதுச்செயலர் முரளி சங்கர் அளித்த பேட்டி: அன்புமணியின் பொதுக்குழுவை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி தரவில்லை; தடை என்றும் சொல்லவில்லை. இது அதிகார பிரச்னை என்பதால், உரிமையியல் நீதிமன்றம் சென்று தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.அன்புமணி தலைவராக நீடிக்கலாமா, வேண்டாமா என்ற சர்ச்சை தேவையில்லை. அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், வெறும் ஒரு சேர் போட்டு, வெள்ளைத்துண்டு போட்டு காண்பித்து, ராமதாஸ் வரவில்லை என கூறுவது சரியல்ல.அன்புமணி நேரடியாக தோட்டத்திற்கு வந்து ராமதாசை சந்தித்து, பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக பேசியிருக்க வேண்டும். ராமதாசை, அன்புமணி சந்திக்காதது தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். நீதிமன்றத்தில் தீர்ப்பு உத்தரவை வாங்குவதற்கு வழக்கறிஞர் பாலுவும், மற்ற வழக்கறிஞர்களும் காட்டிய அக்கறையை, ராமதாஸ் - அன்புமணி இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க காட்டியிருந்தால், ராமதாஸ் தற்போது ஓய்வில் இருந்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.பின், ராமதாஸ் கூறுகையில், ''அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்து, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S Balakrishnan
ஆக 10, 2025 17:22

வேலையை பாருங்கள். தந்தை மகன் குடும்ப சட்டையை குப்பையில் போடுங்கள். சீட் பேரம் எல்லாம் பிறகு பார்க்கலாம். திமுகவும் அதிமுக வும் மாதக் கணக்கில் வரும் எலெக்ஷனுக்கு யாரையும் எதிர் பார்க்காமல் கலத்தில் கருத்தாய் இருக்கிறார்கள். பாஜக வை சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறார்கள். ராமதாஸுக்கு உண்மை நிலவரத்தை உணரும் தன்மை மிகக் குறைத்து விட்டது. அது தேராது. தைலாபுரமும் மெடிக்கல் சர்டிபிகேட் டும் தான் அவருக்கு தற்போது கை கொடுக்கும் என்று காலத்தை வீணடிக்கிறார். ஆக வேண்டியதை விரைந்து செய்யுங்கள்.


T.sthivinayagam
ஆக 10, 2025 10:54

பாஜாக கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர தயார்


R.PERUMALRAJA
ஆக 10, 2025 09:36

தமிழகத்தில் அதுவும் குறிப்பாக தென் தமிழகத்தில், வன்னியர்களை இடஒதுக்கீடு தொடர்பாக தனிமை படுத்தி, அவற்றுடன் எந்த கட்சியும் கூட்டு சேராமல் பார்த்துக்கொள்வதே தி மு க விற்கும் அதன் உளவுத்துறைக்கும் முதல் வேலை சலசலபிலிருந்து மீண்டு எழுந்து வருவதற்குள் ப மா க வை கூறு போட்டு, அதன் ஓட்டுக்களை சிதறடித்து, அதன் தலைவர்களை மனதளவில் நோகடித்து, எந்த அணிபக்கமும் செல்லாமல் பார்த்து கொண்டு, பின் தனியே நிற்க சொல்லி பண பெட்டிகளை கொடுத்து சரிக்கட்டி ஆ தி மு க பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்டு , ஆ தி மு க வை பலவீனப்படுத்தவே தி மு க இந்த தந்தை மகன் பிரச்சனையை பெரிதுபடுத்துகிறது .


அப்பாவி
ஆக 10, 2025 08:51

எண்பதை அறுபது வென்றுவிட்டது.


தாமரை மலர்கிறது
ஆக 10, 2025 08:11

பாமக, விடுதலை சிறுத்தை இரண்டுமே சாதிக்கட்சிகள். இவைகள் ஒழிவதால், தமிழகத்திற்கு நல்லது தான் நடக்கும்.


Oviya Vijay
ஆக 10, 2025 06:47

இம்மாம் பெரிய மாநாடு நடத்த தெரிஞ்ச ஒனக்கு ஒன்னோட நைனாவ கரெக்ட் பண்ண தெரியலையே ராசா... உன்னோட நைனா எம்புட்டு அனுபவசாலி... அவர கம்பேர் பண்றப்போ நீயெல்லாம் ஒரு பச்சா... அதாவது இன்னமும் நீ ஒரு கத்துக்குட்டின்னேன்... புதுசா கட்சி ஆரம்பிச்சாலும் ஒரு யூஸும் இல்லை... ஏன்னா ஏற்கனவே கட்சி கலகலன்னு இருக்கு... ஒமக்கும் உங்க அப்பனுக்கும் நடக்குற சண்டையில என்னைக்கோ தொண்டர்கள் மனம் மாறிப் போயாச்சு... நீங்க சண்டை போட்டுக்கிட்டே இருங்க... நாங்க எங்க இஷ்டத்துக்கு ஓட்டு போட்டுக்கிறோம் அப்படின்னு உங்களக் கொஞ்சம் கூட கேர் பண்றதேயில்ல... நீங்க போடுற சண்டையில உண்மையான ஆதாயம் யாருக்கு தெரியுமோ... திமுகவுக்கும் தவெகவுக்கும் தான்... எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் பாரு லவ்பெல்... ஒம்மோட ரெண்டு கண்ணும் குளமா இருக்கப் போவுது...


ராஜாராம்,நத்தம்
ஆக 10, 2025 15:21

அப்பத்துக்கு மதமாறிய நீ ஜோசப் விஜய்க்கு முட்டுக் கொடுப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் உன்னை கும்பிட்டு கேட்டுக்கிறேன் தயவுசெய்து நான் ஒரு இந்து என்று நீண்ட நெடிய கொடிய விளக்கவுரையை மட்டும் கொடுக்காதே அதை படித்து படித்து சலித்துப் போய் விட்டது வேறு ஏதாவது பொய்யை ரெடி பண்ணு..


Oviya Vijay
ஆக 10, 2025 16:50

உங்களைப் போன்றவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது மிஸ்டர் ராஜாராம் அவர்களே... அனைத்து ஹிந்துக்களும் சங்கிகள் என்பதை மட்டுமாவது புரிந்து கொள்ளுங்கள்...


Oviya Vijay
ஆக 10, 2025 23:30

உங்களைப் போன்ற சங்கிகளுக்கு நான் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் புரியாது. ஆனால் ஹிந்துக்கள் அனைவரும் சங்கிகள் அல்ல என்பதை மட்டுமாவது புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் சங்கிகளாகவே இருங்கள். நாங்கள் உண்மையான ஹிந்துக்களாகவே இருந்து கொள்கிறோம்...


Oviya Vijay
ஆக 10, 2025 06:19

பாமக எனும் ஒரு கட்சி இரண்டாக உடையப்போகிறது என்பதெல்லாம் சில மாதங்கள் முன் வரை யாரும் கற்பனை கூட செய்து பார்த்திராத ஒரு விஷயம்... இது முழுக்க முழுக்க தந்தை மகன் இடையேயான ஈகோ மோதலேயன்றி வெளி நபர்களுக்கு சம்பந்தம் இல்லை... ஆனால் இதனால் மிகப்பெரிய ஆதாயம் யாருக்கெனில் அது ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்குத் தான். ஏனெனில் எதிர்க்கூட்டணியில் ஒரு கட்சி கூட உருப்படியாக இல்லை. அனைத்தும் ஓட்டை உடைசல்கள்... அதை ஒட்டவைத்துக் கொண்டு வாய்ஜாலம் பேசிக்கொண்டு திரிகின்றனர்... சங்கிகளைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும்... தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தோல்வியடையப் போகிறதென்று... லவ்பெல்லுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் ஜெயிக்கும் என்று... ஆனால் ராமதாஸ்க்கு தன் முதிர்ந்த அரசியல் அனுபவத்தால் கண்கூடாகத் தெரிகிறது அதிமுக பாஜக அதல பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று. அதில் மாட்டிக்கொண்டு விடவேண்டாம் என லவ்பெல்லுக்கு எச்சரிக்கை விடுத்தும் லவ்பெல் அதனைப் புரிந்து கொள்ளவில்லை... ஆகையால் தேர்தல் முடிந்தபின் இன்னமும் பாமக கலகலத்துப் போகும்...


பிரேம்ஜி
ஆக 10, 2025 06:55

உண்மைதான்! எதிர்க்கட்சி கூட்டணி படு வீக்! பலப்படுத்த இயலாது! ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும்! ராமதாஸ் கணக்கு சரியே! அன்புமணி புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்!


visu
ஆக 10, 2025 06:59

திமுக என்றுமே தொடர்ந்து 2 ம் முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்ற சாபம் உள்ளது தவிர ADMK பிஜேபி கூட்டணி வேறு பலம் தந்துள்ளது அதனால் admk வெற்றி பெறுவது நிச்சயம் PMK ராமதாஸ் ஓய்வு பெரும் வயதில் ஆங்காரத்தினால் கட்சியையே அழிக்க நினைக்கிறார் ஆனா தொண்டர்கள் கட்சியை காக்க அன்புமணி பின்னால் செல்வர்


Kasimani Baskaran
ஆக 10, 2025 05:33

அப்பனும் மகனும் சேர்ந்து அடிக்கும் கூத்து சரித்திரம் காணாதது...


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 10, 2025 00:16

ஒன்றிய அரசின் வழக்கு நெருக்கடி அப்படி. வேற வழியில்லை. கட்சியை காவு வெச்சித் தான் தலைக்கு மேலேஇருக்கும் கத்தியிலிருந்து காப்பாத்திக்கணும்.


பேசும் தமிழன்
ஆக 10, 2025 10:46

டாஸ்மாக் ஊழல் மூலம் தலைக்கு மேல் கத்தி துவங்குவது திமுக கட்சிக்கு தான்... அடமானம் வைக்க வேண்டுமானால் .....அந்த கட்சியை தான் அடமானம் வைக்க வேண்டும்.


புதிய வீடியோ