வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு நெருக்கடியும் வராது எல்லாம் தோழமை சுட்டு. உண்டியல் குலுக்கிஸ் நிரந்தர அறிவாலய வாசல் செம்பு தூக்கி சேவுகம் செய்யும் கூட்டம். காங்கிரஸ் வேஷ்டி கிழிக்கும் கூட்டம்.
அண்ணா பல்கலை கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முழு உண்மைகளையும் வெளியே கொண்டு வர தி.மு.க., அரசுக்கு அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த சில மணி நேரத்தில், குற்றவாளி என ஞானசேகரனை அடையாளம் கண்டு, சென்னை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். அத்துடன், விவகாரத்தின் சூடு தணிந்து விடும் என, அரசு எதிர்பார்த்தது. ரகசிய வாக்குமூலம்
ஆனால், குற்றவாளி ஞானசேகரன், தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும், எதிர்க்கட்சிகள் கொதித்து எழுந்தன. கட்சியின் மேலிடத்தில் சிலருடன் அவருக்கு நெருக்கம் இருப்பதால், வழக்கை அமுக்க முயற்சி நடக்கும் என, அவை சந்தேகம் கிளப்பின. அதை உறுதிப்படுத்துவது போல அடுத்தடுத்த நிகழ்வுகள் அமைந்தன. மாணவியின் ரகசிய வாக்குமூலம் கசிந்தது. அவரது நடத்தை குறித்த மட்டமான கேள்விகள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டன. போலீஸ் கமிஷனர் பேட்டி அளித்து, தெரிவித்த சில தகவல்களில், எதிர்க்கட்சிகள் சில முரண்பாடுகளை அடையாளம் காட்டின. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பல கேள்விகளுடன் களம் இறங்கி, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.அதைத்தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் களம் இறங்கி, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தியது. 'யார் அந்த சார்' என்ற கேள்வியை முன்னிறுத்தி பிரசாரத்தில் இறங்கினர். த.வெ.க., தலைவர் விஜயும் களத்துக்கு வந்தார். 'தமிழக பெண்களுக்கு, தி.மு.க., அரசால் பாதுகாப்பில்லை; இருந்த போதும் ஒரு சகோதரனாக பாதுகாப்பாக நிற்பேன்' என்று உறுதிமொழி அளித்து, பெண்களிடம் கடிதமாக வினியோகித்தார். கவர்னர் ரவியை சந்தித்தும் முறையிட்டார். நாம் தமிழர் கட்சியும், சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் சவுமியாவும், பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் குஷ்புவும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக எடுத்து, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அக்குழுவினர் உடனே விசாரணையை துவக்கினர். யார் அந்த சார்?
பற்றி எரியும் பிரச்னையாக உருவெடுத்த பிறகும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பல தரப்பிலும் எழுந்தது. தொலைக்காட்சி விவாதங்களும், சமூக வலைதள பதிவுகளும் அதை எதிரொலித்ததால், இனியும் மவுனம் காப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தன அக்கட்சிகள். 'ஞானசேகரனோடு சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும், அந்த சார் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும்' என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் துவங்கி வைத்தார். இந்த விவகாரம் குறித்து, நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என, அவரது கட்சி எம்.எல்.ஏ., பாலாஜி, சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணனும், தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளன, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று விமர்சிக்க துவங்கி, பலாத்கார விவகாரத்துக்கு வந்திருக்கிறார். 'எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு தி.மு.க., அரசு அனுமதி கொடுப்பதில்லை. தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதா?' என, முதல்வர் ஸ்டாலினை பெயர் சொல்லி கேட்டிருக்கிறார். பலாத்கார விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சியினரும் நெருக்கடி கொடுக்க துவங்கி இருப்பதால், தி.மு.க., தலைமை பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளது; எப்படி சமாளிப்பது என, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. - நமது நிருபர் -
ஒரு நெருக்கடியும் வராது எல்லாம் தோழமை சுட்டு. உண்டியல் குலுக்கிஸ் நிரந்தர அறிவாலய வாசல் செம்பு தூக்கி சேவுகம் செய்யும் கூட்டம். காங்கிரஸ் வேஷ்டி கிழிக்கும் கூட்டம்.